சென்னை: இன்று தொடங்கும் ’கூலி’ படப்பிடிப்பில் ரஜினிகாந்த், அமீர்கான் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சவுபின் சஹீர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் திரைப்படம் ‘கூலி’. தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இயக்குநர்களில் முதன்மையாக இருக்கும் லோகேஷ் கனகராஜுடன் ரஜினிகாந்த் இணைந்திருப்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு பெருமளவில் அதிகரித்துள்ளது.
இப்படம் தங்கம் கடத்தல் குறித்த கதை என கூறப்படும் நிலையில், ப்ரோமோ வீடியோ வெளியானது முதல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் ரஜினிகாந்த் ’தேவா’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் கூலி திரைப்படம் தனிக்கதை எனவும், இப்படம் தனது LCU யுனிவர்சில் இடம்பெறாது என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். சமீபத்தில் தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் கோட், அமரன் தவிர மற்ற படங்கள் பெரிய அளவில் வசூலை பெறாத நிலையில், அடுத்த வருடம் வெளியாகும் கூலி திரைப்படம் ’ஜெயிலர்’ போல அதிக வசூலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#Coolie - An Important Schedule to happen in Jaipur for a week..🔥 Superstar #Rajinikanth & #Amirkhan are said to be a part of the schedule..⭐
— Laxmi Kanth (@iammoviebuff007) December 9, 2024
• Wide release in Hindi will bring the 1000crs for Kollywood..💯 Also Thalaivar's Birthday Week begins..🔥 Waiting for the double…
இந்நிலையில் கூலி படத்தில் ஏற்கனவே நடித்து வரும் நட்சத்திர நடிகர்கள் தவிர பாலிவுட் பிரபல நடிகர் அமீர் கான் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று கூலி படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க ரஜினிகாந்த் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு கிளம்பி சென்றார். நடிகர் அமீர் கானும் ஜெய்ப்பூரில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை வைத்து அமீர் கான் கூலி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.
இதையும் படிங்க: சூர்யா ரசிகர்களுக்கு 'சர்ப்ரைஸ்'; ‘சூர்யா 45’ படத்திற்கு இசையமைக்கும் 20 வயது இளம் இசையமைப்பாளர்!
வரும் டிசம்பர் 12ஆம் தேதி ரஜினிகாந்த் பிறந்தநாள் அன்று ஜெயிலர் 2 அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தளபதி படமும் ரீரிலீஸ் செய்யப்படுகிறது. அதேபோல் கூலி படத்திலிருந்தும் சூப்பர்ஸ்டார் பிறந்தநாள் ட்ரீட்டாக அப்டேட் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.