ETV Bharat / entertainment

வேட்டையன் படப்பிடிப்பு தீவிரம்: போலீஸ் உடையில் மிரட்டும் ரஜினிகாந்த்! ரசிகர்களுக்கு கையசைத்த வீடியோ வைரல்! - வேட்டையன் திரைப்படம்

vettaiyan movie update: வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தீவிரமாக நடந்து வரும் நிலையில், படப்பிடிப்புத் தளத்திற்கு ரஜினிகாந்த் காவல் உடையில் வந்திருந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காவல் உடையில் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு கையசைத்த வீடியோ வைரல்
வேட்டையன் படப்பிடிப்பு தீவிரம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 28, 2024, 10:24 PM IST

ஐதராபாத்: வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்புத் தளத்தில் கூடியிருந்த ரசிகர்களை நோக்கி கையசைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்தின் 170வது படமான வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தீவிரமாக நடந்து வருகிறது. லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தை, இயக்குநர் ஞானவேல் இயக்கி வருகிறார்.

அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா, துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், இத்திரைப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்புகள் தூத்துக்குடி மற்றும் சென்னை பகுதிகளில் நடந்து முடிந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்புகள் ஆந்திர மாநிலம் கடப்பாவில் நடந்தது.

இதைத் தொடர்ந்து, தற்போது வேட்டையன் திரைப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில், இப்படத்தின் புரோமோ வீடியோவை தயாரிப்பாளர்கள் பகிர்ந்தனர். இப்படத்தில் ரஜினி ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் புரோமோ வீடியோவில் அவர் சுபாஷ் சந்திரபோஸின் புகைப்படத்துடன் கூடிய புத்தகத்தை வாசிப்பது போன்ற காட்சி இருந்தது.

இந்நிலையில் படப்பிடிப்பித் தளத்திற்கு காவல் உடையில் காரில் வந்திருந்த ரஜினிகாந்த் அங்கு கூடியிருந்த ரசிகர்களை நோக்கி கையசைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: அமெரிக்க ராணுவ வீரர் தற்கொலைக்கு ஜி.வி.பிரகாஷ் உருக்கமான இரங்கல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.