ETV Bharat / entertainment

நடிகர் பிரதீப் ரங்கநாதன் - இயக்குநர் அஷ்வத் காம்போ... டிராகன் படத்தின் புதிய அப்டேட்! - Dragon title teaser released - DRAGON TITLE TEASER RELEASED

Dragon Movie Title Teaser: இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டிராகன் படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டிராகன் படத்தின் புகைப்படம்
பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டிராகன் படத்தின் புகைப்படம் (credit to etv bharat tamil nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 5, 2024, 5:40 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன். இவரின் கோமாளி படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன்பிறகு, கதாநாயகனாக நடித்து லவ் டுடே படத்தை இயக்கினார். இப்படமும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது, பிரதீப் ரங்கநாதன் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், எல்ஐசி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், உருவாகும் புதிய படத்திலும் நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பு ஏற்கனவே வெளியானது.

இந்நிலையில் இன்று படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளியாகியது. இந்தப் படத்திற்கு டிராகன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று(மே.5) பூஜையுடன் தொடங்கியது. இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஓ மை கடவுளே படம் காதல் கதையாக உருவானது. அதேபோல், இப்படமும் எதுமாதிரியான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் இயக்குநர் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் மற்ற கதாபாத்திரங்கள் குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது டிராகன் படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: கபடி.. கபடி.. மாரி செல்வராஜ் இயக்கும் - துருவ் விக்ரம் படத்தின் புதிய அப்டேட்! - Mari Selvaraj New Movie Update

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.