ETV Bharat / entertainment

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ’டிராகன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Dragon movie first look: அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

author img

By ETV Bharat Entertainment Team

Published : 5 hours ago

டிராகன் திரைப்படம் ஃபர்ஸ்ட் லுக்
டிராகன் திரைப்படம் ஃபர்ஸ்ட் லுக் (Credits - @Ags_production X account)

சென்னை: இயக்குநர் மற்றும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன், ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த ’கோமாளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். கோமாளி திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து அவரே நடித்து இயக்கிய ’லவ் டுடே’ திரைப்படம் கோலிவுட்டே திரும்பி பார்க்கும் அளவு மிகப் பெரும் வெற்றி பெற்றது. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான ’லவ் டுடே’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

அதனை தொடர்ந்து தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK) என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.இதனை தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ’டிராகன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான 'ஓ மை கடவுளே' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அஷ்வத் மாரிமுத்து அறிமுகமானார். 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி வெளியான இந்தப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் ’டிராகன்’ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை லவ் டுடே, சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான ’கோட்’ உள்ளிட்ட படங்களை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. லியோன் ஜேம்ஸ் இசை அமைத்துள்ளார்.

இதையும் படிங்க: ரீ என்ட்ரி கொடுத்த சாச்சனா, ஆண்கள் அணியால் கண் கலங்கிய ரவீந்தர்... இந்த வாரம் வெளியேறப் போவது யார்?

இந்நிலையில் இன்று விஜயதசமியை ஒட்டி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. பஸ்ஸின் மீது சிகரெட் பிடித்தபடி 'konjam local ah' லுக் என்ற பிரதீப் ரங்கநாதன் அமர்ந்துள்ள போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இப்படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் இன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறுகிய காலத்திலேயே தனக்கென இளம் ரசிகர்களை பிடித்துள்ள பிரதீப் ரங்கநாதன் டிராகன் படத்தின் மூலம் அதனை தக்கவைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.