சென்னை: நடிகர்கள் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி உள்ளிட்டோர் நடித்துள்ள சயின்ஸ் பிக்சன் திரைப்படம் 'கல்கி 2898 AD'. அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் புஜ்ஜி & பைரவா என்ற தலைப்பில், படத்தின் கதாப்பாத்திரங்களை அறிமுகப்படுத்தும் அனிமேசன் வீடியோ வெளியான பிறகு, உலகம் முழுவதிலும் இப்படத்தின் மீதான அறிவிப்பு அதிகரித்துள்ளது.
கல்கி திரைப்படம் அறிவிப்பு வந்ததில் இருந்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படத்தில் இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடிப்பதால் இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இப்படம் வரும் ஜூன் 27ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் இந்த மாதம் 10ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில் புஜ்ஜி என்ற வாகனம் பயன்படுத்தப்படுகிறது. இதுவும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் மீது தான் அனைவரது எதிர்பார்ப்பும் உள்ளது. நாக் அஸ்வின் இயக்கியுள்ள இப்படம் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில், கல்கி படத்தில் பயன்படுத்தப்படும் எதிர்கால வாகனமான 'புஜ்ஜி'யை அறிமுகப்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து, இந்த வாகனம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் முன்னிலையில் பார்வைக்கு வைக்கப்பட்டது. ஒரு பன்மொழி படைப்பாக புராணக் கதைகளால் ஈர்க்கப்பட்ட, எதிர்காலத்தில் நடக்கும் அறிவியல் புனைகதை வகையில் இப்படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்படத்தின் முதல் பாகத்தில் கமல்ஹாசன் சிறிது நேரமே காட்சிகள் தோன்றுவார் எனவும், இரண்டாம் பாகத்தில் மட்டுமே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: "எனது நடிப்புத் திறனை வளர்த்துக் கொள்ள வெப்பன் படம் வாய்ப்பாக இருந்தது" - வசந்த் ரவி பேச்சு! - Weapon Movie