ETV Bharat / entertainment

புதிய படப்பிடிப்புகளுக்கு இன்று ஏற்பட்ட சிக்கல்.. தயாரிப்பாளர்கள் சங்கம் Vs நடிகர் சங்கம் மோதல்! - TAMIL FILM SHOOTING

தமிழ்த் திரைப்படத்துறையை மறுசீரமைப்பு செய்ய நவம்பர் 1 முதல் புதுப்படங்களின் படப்பிடிப்பு நடக்காது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியதைத் தொடர்ந்து, இன்று புதிய படங்களின் படப்பிடிப்பு எதுவும் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது.

தென்னிந்திய நடிகர்கள் சங்கம்
தென்னிந்திய நடிகர்கள் சங்கம் (Credits- TN Artists association FB Page, ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 1, 2024, 3:40 PM IST

சென்னை: தமிழ்த் திரைப்படத் துறையை மறுசீரமைப்பு செய்ய நவம்பர் 1aaம் தேதி முதல் புதுப் படங்களின் படப்பிடிப்பு நடக்காது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. இது குறித்து தமிழ் திரைப்படth தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்கனவே வெளியிட்ட அறிக்கையில், “தயாரிப்பு செலவு அதிகரித்து, தயாரிப்பாளர்களுக்கு கூடுதல் பணச்சுமை ஏற்படுவதால், திரைத்துறை சார்ந்த அனைத்து சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மறுசீரமைப்பு ஏற்படுத்துவதற்கு ஏதுவாக, தயாரிப்பில் இருக்கும் படங்களின் படப்பிடிப்பு மட்டும் நடத்தப்பட வேண்டும்.

நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் புதிய படங்களை துவக்க வேண்டாம் என்று தயாரிப்பாளர்களிடம் சொல்லி இருந்தோம். அதனடிப்படையில் இன்று முதல் புதிய படங்களின் பூஜை மற்றும் படப்பிடிப்பு தொடங்கப்படாது என்று தெரிவித்திருந்தது. இதனால் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை புதிய படங்களின் பூஜை மற்றும் படப்பிடிப்பு நடக்காது. இந்த நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த அறிவிப்புக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆட்சேபனை தெரிவித்து இருந்தது.

இதுகுறித்து அவர்கள் தரப்பில் ஒட்டுமொத்த தமிழ்த் திரைத்துறையிலும் மறுசீரமைப்பை ஏற்படுத்த பேச்சு வார்த்தைகள் மும்முரமாக நடைபெற்று வரும் காரணத்தால், 'புதிய படங்களின் படப்பிடிப்பு இல்லை' என்ற முந்தைய தீர்மானம் தளர்த்தப்பட்டு, கடந்த மாதம் கூட புதிய படங்களை துவங்கி படப்பிடிப்புகளும் நடந்து வரும் நிலையில், தற்போது மீண்டும் படப்பிடிப்பு பணிகளை முடக்குவதாக அறிவிப்பு வெளியானது குழப்பத்தை விளைவிக்கிறது.

இதையும் படிங்க: 'அமரன் திரைப்படம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவுக்கே பெருமை' - தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா

இந்த தன்னிச்சையான முடிவினால் மிகப் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகப் போவது தமிழ்த் திரைத்துறை தொழிலாளிகள் மட்டுமல்ல. முதலீடு செய்யும் தயாரிப்பாளர்களுக்கும் அது பெரும் இழப்பையே ஏற்படுத்தும் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டி உள்ளது. அனைவரும் ஒன்றிணைந்து உரையாடல் மூலமாக ஒரு சிக்கலுக்கான ஒருமித்த தீர்வு காண முற்படும் வேளையில், அந்த முயற்சியை விழலுக்கு இறைத்த நீராக்கும் விதமாக, வேலை நிறுத்தம் போன்ற அவசியமற்ற தீவிரமான முடிவுகள், தீர்வு காணும் முயற்சிக்கு தனிப்பட்ட காரணங்களுக்காக சிலரால் இடப்படும் முட்டுக்கட்டையாகவே கருதப்படும்.

அத்தகைய செயல்பாட்டை தென்னிந்திய நடிகர் சங்கமும் ஒருபோதும் ஆதரிக்காது. அதேசமயம், தமிழ்த் திரைத்துறை தொழிலாளர்களின் நன்மைக்கான எந்த நடவடிக்கையிலும் ஒன்றிணைந்து, ஒற்றுமையாக செயலாற்ற தென்னிந்திய நடிகர் சங்கம் எப்போதுமே முன்னிலை வகித்துள்ளது. இனியும் அந்த நிலைப்பாடு தொடரும். ஆகவே, இந்த சந்தர்ப்பத்திலும் திரைத்துறை சிக்கல்களுக்கு தீர்வு காண்பதில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஒத்துழைப்பு முழுமையாக உண்டு.

முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும், மறுசீரமைப்புக்கும் மட்டுமே. தொழிலாளர் வாழ்வுரிமையை ஒடுக்கவும், வேலைகளை முடக்கவும் அல்ல” என்று காட்டமாக அறிக்கை மூலம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இன்று புதிய படங்களின் பூஜை எதுவும் நடக்கவில்லை. இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும் மீண்டும் புகைச்சல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.