ETV Bharat / entertainment

'ப்ளடி பெக்கர்' படத்திற்கு கவினை வேண்டாம் என்ற நெல்சன் - காரணம் என்ன? - NELSON DILIPKUMAR

கவினை வைத்து படத்தை இயக்குகிறேன் என சிவபாலன் கூறியபோது, வேண்டாம் என முதலில் மறுத்தேன். ஆனால், கவின் மிகச் சிறப்பாக நடித்துள்ளார் என இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தெரிவித்தார்.

ப்ளடி பெக்கர் படக்குழு
ப்ளடி பெக்கர் படக்குழு (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 19, 2024, 7:44 AM IST

சென்னை: நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில், சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில், கவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ப்ளடி பெக்கர்' (Bloody Beggar). தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 31ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில், படத்தின் தயாரிப்பாளர் நெல்சன் திலீப்குமார், நடிகர் கவின் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

அப்போது மேடையில் பேசிய இயக்குநர் நெல்சன் திலீப்குமார், "சிவபாலன் எனக்கு 15 வருடப் பழக்கம். ஜெயிலர் படம் வரை என்னுடன் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். ஜெயிலர் படத்தின்போது தான், இந்த படத்தின் கதையை என்னிடம் சொன்னார். அப்படியே படத்தையும் நீங்களே தயாரியுங்கள் என்றார். அப்போது ஜெயிலர் படம் இயக்கிக் கொண்டிருந்ததால் இந்த படம் வெற்றி அடைந்தால் படம் தயாரிக்கிறேன் என்றேன்.

ஜெயிலர் படம் வெற்றியடைய வேண்டும் என என்னை விட சிவபாலன் அதிகம் வேண்டியிருப்பார். பிறகு ஜெயிலரும் வெற்றியடைந்தது. அதன்பின் யோசித்தேன், நான் படம் தயாரிப்பது எனக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும். எனவே இந்த படத்தைத் தயாரிக்க முடிவு செய்தேன். நான் கவினை வைத்து இந்த படத்தை இயக்குகிறேன் என சிவபாலன் கூறினார். அப்போது டாடா படம் கூட வெளியாகவில்லை, அந்த நேரத்தில் கவின் வேண்டாம் என முதலில் நான்தான் மறுத்தேன்.

இதையும் படிங்க: தொடர்ந்து அறிமுக இயக்குநர்கள் இயக்கத்தில் நடிப்பது ஏன்? - நடிகர் கவின் கொடுத்த விளக்கம்!

உன்னுடைய நட்பை ஒதுக்கி வை அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றால், அதை நேரம் வரும்பொழுது பிறகு செய்கிறேன் என்றேன். மேலும், இன்றைய காலகட்டத்தில் நல்ல மார்க்கெட் உள்ள நடிகர்களை வைத்துப் போகலாம் என நினைத்தேன். உதாரணமாக தனுஷ், விஜய் சேதுபதி போன்ற நடிகர்களிடம் பேசலாம் என நினைத்தேன். ஆனால் கவின் தான் நடிக்க வேண்டும் என சிவபாலன் உறுதியாக இருந்தார்.

அதன் பிறகு கவினுக்கு லுக் டெஸ்ட் செய்து காண்பித்தனர், பிறகு ஓரளவிற்கு நம்பிக்கை வந்தது. பெரிதாக நான் படத்தில் தலையிடவில்லை. நான் தான் தயாரிப்பாளர் என்பதற்காகப் படப்பிடிப்பு தளத்தில் சுற்றினேன். ஒட்டுமொத்த படம் முடித்த பிறகு படம் பார்த்தேன், ஆச்சரியம் அடைந்தேன். இந்த படத்தில் சிவபாலனைத் தொடர்ந்து அடுத்த இடத்தில் கவின் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். நான் கவின் நடிக்க வேண்டாம் என மறுத்தது தவறு என புரிந்து கொண்டேன்.

நான் படம் தயாரிக்க காரணமே புதுவிதமான கதைக்களம் தான். த்ரில்லர் கதையை டார்க் காமெடியுடன் சேர்த்து அற்புதமாகச் செய்துள்ளனர். 'ப்ளடி பெக்கர்' படத்துடன் நண்பர் சிவகார்த்திகேயனின் அமரனும், ஜெயம் ரவியின் பிரதர் படம் ஒன்றாக தீபாவளிக்கு வருகிறது. மூன்று படமும் வெற்றியடைய வேண்டும். பணம் உள்ளதே என தயாரிக்கக் கூடாது, படம் தீர்மானிக்க வேண்டும். நண்பர்களுக்காக படம் செய்யக் கூடிய ஆல் நான் இல்லை. படத்தின் கரு பிறகு தான் கவின், சிவபாலன் எல்லாம்.

நான் படம் இயக்குவதற்கு முன்னாள் இருந்தே இவர்கள் என்னோடு இருந்துள்ளனர். எனவே தற்போதும் உடன் பயணிக்கின்றனர். நான் ஏதோ ஒரு பெயர் சொல்லும் இயக்குநராக இருப்பதால் மட்டுமே இவர்கள் என்னுடன் பயணிக்கவில்லை. எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் இயல்பாக பழகக் கூடியவர்கள் தான் என்னுடன் இருப்பவர்கள்" எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.