சென்னை: கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர், நெல்சன் திலீப்குமார். முதல் படமே மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைய டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கினார். இந்நிலையில், மே தினத்தை முன்னிட்டு புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளதாக நெல்சன் அறிவித்துள்ளார்.
இதன்படி, ஃபிலமெண்ட் பிக்சர்ஸ் (Filament Pictires) என தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு நெல்சன் பெயரிட்டுள்ளார். இவ்வாறு தொடங்கப்பட்ட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தரமான காமெடியான படங்களை வழங்குவதே எங்கள் எண்ணம் எனவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.
மேலும், வருகிற 3ஆம் தேதி நெல்சனின் ஃபிலமெண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் உருவாக உள்ள முதல் படத்தின் அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மாற்றம் அறக்கட்டளை தொடங்க காரணம் என்ன? - ரகசியம் பகிர்ந்த ராகவா லாரன்ஸ்! - MAATRAM STARTED By RAGHAVA LAWRENCE