ETV Bharat / entertainment

"சந்தோஷத்தில் அழுதுவிட்டேன்" - தேசிய விருது வென்ற திருச்சிற்றம்பலம் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் பிரத்யேக பேட்டி! - 70th National film awards

70th National film awards: திருச்சிற்றம்பலம் படத்திற்காக சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருது வென்றுள்ள சதீஷ் ஈடிவி பாரத்திற்கு தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

தேசிய விருது வென்றுள்ள நடன இயக்குநர் சதீஷ்
தேசிய விருது வென்றுள்ள நடன இயக்குநர் சதீஷ் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 16, 2024, 3:26 PM IST

சென்னை: 70ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஓவ்வொரு வருடமும் திரைத்துறையில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகை, இயக்குநர், இசையமைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு தேசிய விருது வழங்குகிறது.

ஈடிவி பாரத்திற்கு நடன இயக்குநர் சதீஷ் பிரத்யேக பேட்டி (Credit - ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில் 2022ஆம் ஆண்டில் தணிக்கை செய்யப்பட்ட படங்களுக்கு விருதுகள் அறிவிக்கபட்டுள்ளது. இந்நிலையில் தமிழில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2022இல் வெளியான திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'. இப்படத்தில் தாய் கிழவி, மேகம் கருக்காதா ஆகிய பாடல்கள் மிகவும் பிரபலமானது. இந்நிலையில் 'திருச்சிற்றம்பலம்' படத்திற்காக சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருது ஜானி மற்றும் சதீஷ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நடன இயக்குநர் சதிஷ் நமது ஈடிவி பாரத் சினிமா செய்தியாளர் ஆனந்திடம் தொலைப்பேசி வாயிலாக பேசியபோது, "நான் தற்போது அமெரிக்காவில் தனியாக உள்ளேன். தேசிய விருது கிடைத்த செய்தி கேட்டு எனது கண்ணில் கண்ணீர் வருகிறது. நான் வீட்டில் கூறிய போது, எனது மனைவி மற்றும் குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். தேசிய விருது வென்றதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் தொலைபேசி மூலம் முதலில் வாழ்த்து தெரிவித்தார். எனக்கு இதனை எப்படி அனுபவிப்பது என தெரியவில்லை" என்றார்.

பின்னர் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த தனுஷ் அழைத்தாரா என்ற கேள்விக்கு, "இனி தான் அவருடன் பேச வேண்டும்" என்றார். திருச்சிற்றம்பலம் படத்தில் வேலை செய்தது குறித்த கேள்விக்கு, "படப்பிடிப்பில் சந்தோஷமாக பணிபுரிந்தோம். ஜானி மாஸ்டருக்கும் தேசிய விருது கிடைத்தது எனக்கு மற்றொரு மகிழ்ச்சி" என்றார். மேலும் எனக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளதை என்னால் விவரிக்க முடியவில்லை" என உணர்ச்சி பொங்க கூறினார்.

பிரபல நடன நிகழ்ச்சி மானாட மயிலாட நிகழ்ச்சியில் சாதித்து சினிமாவில் நுழைந்த சதீஷ், ஆர்ஆர்ஆர், என்னை நோக்கி பாயும் தோட்டா, மாஸ்டர், பிரின்ஸ், அயலான் உள்ளிட்ட பல படங்களில் நடன இயக்குநராக பணிபுரிந்துள்ளார். மேலும் உன்னாலே உன்னாலே, வாரணம் ஆயிரம், நானும் ரவுடி தான், அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: 70வது தேசிய திரைப்பட விருதுகள்: 4 விருதுகளை அள்ளிய பொன்னியின் செல்வன் பாகம் 1, சிறந்த நடிகை நித்யா மேனன்! - 70th national film awards

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.