ஹைதராபாத்: மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர் மோகன்லால். இவர் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் விஜயுடன் ஜில்லா, சூர்யாவுடன் காப்பான், ஜெயிலரில் கேமியோ ரோலில் நடித்திருப்பார். இவர் தற்போது பரோஸ் மற்றும் எல்2 எம்புரான் (L2 Empuraan) ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
Wishing @Mohanlal a speedy recovery! ❤️🩹 pic.twitter.com/PjQ31OXcQa
— Sreedhar Pillai (@sri50) August 18, 2024
இந்நிலையில், இவர் இன்று திடீரென உடல்நலக்குறைவால் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிக காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம், தசை வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மோகன்லாலுக்கு அதிக காய்ச்சலுடன் மூச்சு விடுவதில் சிரமம் இருந்தது. அவருக்கு சுவாசத்தொற்று இருக்க வாய்ப்புள்ளது. தொடர்ந்து மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளார். அடுத்த 5 நாட்கள் படப்பிடிப்பு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: "வீட்டு வாடகை ரூ.20 லட்சம் தராமல் எஸ்கேப்?" - யுவன் மீது வந்த புகாரால் பரபரப்பு! - Complaint Against Yuvan