ETV Bharat / entertainment

படக்குழுவினருடன் குறும்புத்தனம் செய்யும் விஜய்... ’லியோ’ திரைப்பட ஸ்பெஷல் வீடியோ வெளியீடு! - ONE YEAR OF LEO

One year of Leo: லியோ திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் ஆனதை முன்னிட்டு, chronicles of Leo என்ற ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டுள்ளது.

லியோ திரைப்பட ஸ்பெஷல் வீடியோ வெளியீடு
லியோ திரைப்பட ஸ்பெஷல் வீடியோ வெளியீடு (Credits - @7screenstudio X account)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Oct 19, 2024, 2:59 PM IST

சென்னை: லியோ திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் ஆனதை முன்னிட்டு படக்குழு ஸ்பெஷல் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சங்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்த லியோ திரைப்படம் கடந்த வருடம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியானது.

லோகேஷ் கனகராஜின் எல்சியூ (LCU) யுனிவர்சில் இடம்பெற்ற லியோ திரைப்படம் விஜய் கரியரில் முக்கிய படமாக அமைந்தது. ரசிகர்கள் எதிர்பார்ப்பின் உச்சத்தில் வெளியான லியோ திரைப்படம், விஜய் கரியரில் அதிக வசூல் செய்த படமாக அமைந்தது. இப்படத்தில் விஜய் பார்த்திபன், லியோ என இரு வேறு கதாபாத்திரங்களில் வித்தியாசங்களை காட்டி பாராட்டை பெற்றார். மேலும் அனிருத்தின் இசையும் படத்தின் வெற்றிக்கு பெரும் பலமாக அமைந்தது.

ஆரம்பத்தில் லியோ வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலில் சாதனை படைத்தது. இந்நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டியில், ”லியோ படத்திற்கு முதலில் பார்த்திபன் என்று தான் பெயர் வைத்தேன், பிறகு லியோ என மாற்றினேன். லியோ 2 படம் எடுத்தால் பார்த்திபன் என்று தான் பெயர் வைப்பேன்” என கூறியிருந்தார். மேலும் விஜய் சார் ஓகே சொன்னால் லியோ 2 படம் எடுப்பேன் எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்று லியோ திரைப்படம் வெளியாகி ஒரு ஆண்டு ஆன நிலையில், லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பல பாடங்கள், நினைவுகள், நிறைய மகிழ்ச்சியான தருணங்கள். ’லியோ’ என்றும் எனது மனதுக்கு நெருக்கமான திரைப்படம். இந்த படம் எடுக்கப்பட முக்கிய காரணமான விஜய் அண்ணாவிற்கு நன்றி.

இதையும் படிங்க: நான் சொம்பு தூக்கியா?... அன்ஷிதாவை காயப்படுத்திய ஆர்னவ்... கொளுத்திப் போட்ட பிக்பாஸ்!

லியோவை வெற்றி படமாக்க வியர்வை, ரத்தம் சிந்தி உழைத்தவர்களுக்கும், ஆடியன்ஸுக்கு நன்றி”. என பதிவிட்டுள்ளார். இதனிடையே லியோ படக்குழு "chronicles of Leo" லியோ ஸ்பெஷல் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் படப்பிடிப்பு நேரத்தில் விஜய், படக்குழுவினருடன் சிரித்து கலாட்டா செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.