ETV Bharat / entertainment

"தமிழில் குழந்தைகளுக்கான படங்கள் வருவதில்லை" - குரங்கு பெடல் நிகழ்வில் எழுத்தாளர் பிரம்மா பேச்சு! - kurangu pedal movie release - KURANGU PEDAL MOVIE RELEASE

Kurangu Pedal: “என் வாழ்க்கையில் நெருக்கமான நிறைய விஷயங்களை குரங்கு பெடல் திரைப்படம் நினைவு கூர்ந்தது. இது ரொம்ப முக்கியமான படம்” என்று நடிகர் காளி வெங்கட் குரங்கு பெடல் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

Kurangu Pedal
Kurangu Pedal
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 1, 2024, 7:30 PM IST

சென்னை: இயக்குநர் கமலக்கண்ணன் இயக்கத்தில், நடிகர் காளி வெங்கட் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் குரங்கு பெடல். இப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு, சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் சந்தோஷ் வேல்முருகன், வசனகர்த்தா பிரபாகரன், இசையமைப்பாளர் ஜிப்ரான் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால், வீடியோ மூலம் பத்திரிகையாளர்களிடம் பேசினார்.

இந்நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் காளி வெங்கட், "இந்தப் படம் எனக்கு ரொம்ப முக்கியமான படம். இந்தப் படம் நிறையக் கொடுத்தது. என் வாழ்க்கையில் நெருக்கமான நிறைய விஷயங்களை நினைவு கூர்ந்தது. குரங்கு பெடல் கோவா திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டப்பட்டது. அவரவர் மொழி மீது அவரவருக்கு ஈடுபாடு இருக்கிறது.

என்னையும், எங்கள் அப்பாவையும் இந்தப் படம் நினைவுபடுத்தியது. அப்போது ஸ்கூல் போகும்போது 10 பைசா கொடுப்பார்கள் இந்தப் படத்தை எல்லோரிடமும் கொண்டு சேருங்கள் என்று கோரிக்கையாக வைக்கிறேன்" என்றார்.

பின்னர், நிகழ்ச்சி மேடையில் பேசிய இசையமைப்பாளர் ஜிப்ரான், "முதலில் பிரம்மா இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். வாகை சூட வா படத்துக்குப் பிறகு, இந்த மாதிரியான கிராமத்துக் கதையைப் பண்ணுகிறேன். நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நன்றி. அனைவரும் ஆதரவு தர வேண்டும்" என்று கூறினார்.

பின்னர் பேசிய எழுத்தாளர் பிரம்மா, "ரொம்ப வருடமாக தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கான படம் இல்லை என்று தான் நினைக்கிறேன். பசங்க விரும்பக்கூடிய படங்கள் என்றால் வன்முறை படமாகத் தான் இருக்கிறது. பெயர் சொல்ல விரும்பவில்லை. இதே சமூகத்தில் தான் குழந்தைகளுக்கான வன்கொடுமை, ஆசிட் ஊற்றுதல் போன்றவை நடக்கிறது. அதற்கு முக்கிய காரணம், நாம் எல்லோரும் தான். நாம் எந்தப் படத்தை ரசிக்கிறோம், எதை ஊக்குவிக்கிறோம் என்பதில் அமைகிறது.

குழந்தைகளை வைத்து எடுக்கும் படங்கள், குழந்தைகளுக்கான படம் என்று நினைக்கிறோம். ஆனால் அப்படி இல்லை. ரொம்ப வருடம் கழித்து குழந்தைகளுக்கான படமாக குரங்கு பெடல் இருக்கிறது. இந்தப் படம் பெரிய நம்பிக்கையைக் கொடுக்கிறது. அதை வேறு எந்தப் படமும் கொடுக்கவில்லை” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து அஞ்சலி குழந்தைகளுக்கான படமாகத் தெரியவில்லையா என்ற கேள்விக்கு, “மற்ற மொழிகளில் குழந்தைகளுக்கான படங்கள் நிறைய இருக்கிறது. நம் மொழியிலும் நிறைய வர வேண்டும். குழந்தைகள் அவ்வளவு பெரிய மார்க்கெட். அந்த வகையிலாவது படங்கள் வர வேண்டும்" என்று பேசினார்.

இதனையடுத்து பேசிய இயக்குநர் கமலக்கண்ணன், "இந்தப் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போதே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதற்குக் காரணம், சிவகார்த்திகேயன் தான். அவ்வளவு பெரிய நடிகர் சிறிய படத்தைத் தயாரிக்கிறார் என்று சொல்லும் போது, அந்த நம்பிக்கை தான் இந்தப் படம் இங்கு வந்து சேர்தற்கு காரணம். டெக்னீசியன்களுக்கும் நன்றி.

சிவகார்த்திகேயன் முழுப் படத்தையும் பார்த்தார். அவருக்கு ரொம்ப பிடித்திருந்தது. நாம் நம் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டிய படம். இந்த 5 சிறிய பசங்களுக்கு கதையைச் சொல்லி புரிய வைத்ததே கஷ்டம்" என்று கூறினார்.

மேலும், எழுத்தாளர் ராசி அழகப்பன் பேசுகையில், "இந்தக் கதை என் 6வது வயதில் நடந்த எனக்கும், என் தந்தைக்குமான உண்மைக் கதை. சைக்கிள் என்பது உலக நாடுகளில் அம்மா, அப்பா மாதிரியான விஷயம். இந்தப் படத்தை உலகம் ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: மாற்றம் அறக்கட்டளை தொடங்க காரணம் என்ன? - ரகசியம் பகிர்ந்த ராகவா லாரன்ஸ்! - MAATRAM STARTED By RAGHAVA LAWRENCE

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.