ETV Bharat / entertainment

சினிமாவில் சினிமா பற்றி எடுத்தால் ஓடாதா? - ஸ்டார் நாயகன் கவின் நம்பிக்கை! - Kavin about Harish Kalyan - KAVIN ABOUT HARISH KALYAN

Kavin Star Movie: படத்தில் பெண் வேடத்தில் நடிப்பதற்கு கரீனா சோப்ரா தான் இன்ஸ்பிரேஷன் எனவும், சில காரணங்களால் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்க முடியவில்லை எனவும் ஸ்டார் பட செய்தியாளர் சந்திப்பில் நடிகர் கவின் தெரிவித்துள்ளார்.

Kavin Star Movie
Kavin Star Movie (photo credit etv bharat tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 2, 2024, 8:26 PM IST

Updated : May 2, 2024, 9:04 PM IST

ஸ்டார் நாயகன் கவின் (Video Credits - ETV Bharat TamilNadu)

சென்னை: 'பியார் பிரேம காதல்' பட இயக்குநர் இளன் இயக்கத்தில், நடிகர் கவின் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஸ்டார்' (Star). இப்படத்தை ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

முன்னதாக, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பாடல்கள் வெளியாகி வெகுவான பார்வையாளர்களைக் கவர்ந்தது. குறிப்பாக, நடிகர் கவின் இளம் பெண்ணாக தோன்றும் பாடல் காட்சி, ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இப்படம் மே 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில், ஸ்டார் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. அப்போது நடிகர் கவின் பேசுகையில், “டாடா படத்திற்கு பிறகு இயக்குநர் இளன் இந்த கதை சொல்ல வந்தார். இந்தக் கதையில் தானாக எல்லாம் அமைந்தது போல் இருந்தது. இந்த படத்தின் மேல் இயக்குநர் வைத்த நம்பிக்கையை நான் காப்பாற்றி இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

இந்த படத்துக்கு ரொம்ப பொறுமை தேவை என்பது தான் எனக்கு கதை கேட்டதும் தோன்றியது” என்றார். பின்னர், யுவன் சங்கர் ராஜாவைப் பற்றி பேசிய கவின், “சத்ரியன் படத்தில் நான் நடித்த பாடல் வரவில்லை. அது அப்போது கஷ்டமாக இருந்தது. இன்று எனது படத்தில் யுவன் சங்கர் ராஜா இசை இருக்கிறது என்பதில் ரொம்ப சந்தோசம்” என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “எனக்கு நடனத்தில் அவ்வளவு சீக்கிரம் நம்பிக்கை வராது. ரிகர்சல் முடிந்த பிறகு தான் கொஞ்சம் நம்பிக்கை வந்தது. படத்தை தாண்டி இங்கு வேலை செய்த அனைவரும் அடுத்த கட்டத்துக்கு போக வேண்டும் என்று ஆசை. நல்ல கன்டென்ட் மற்றும் கதை இருந்தால் ரசிகர்கள் கைவிட்டதில்லை. சினிமாவை வைத்து சினிமாவில் எடுத்தால் ஓடாது என்று சொல்லுவாங்க. ஆனால், நிறைய படங்கள் ஓடியிருக்கிறது. ரசிகர்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது” என்றார்.

பின்னர், நடிகர் சிவகார்த்திகேயன் இடத்தை நீங்கள் பிடிக்கப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்தவர், “சிவா மற்றும் சேதுபதி இரண்டு பேரும் இன்ஸ்பிரேஷன். விஜய் சார், அஜித் சாரைப் பார்த்தது இல்லை. ஆனால், நம்மோடு இருந்த ஒருத்தர் கொடுக்கும் நம்பிக்கை தான் முக்கியம். இந்த படத்தின் டைட்டில் ஸ்டார் என்பது, மக்கள் யாரெல்லாம் ரசிக்கிறோமோ எல்லாரும் ஸ்டார் தான். அவன் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பதும் ஸ்டார் தான். வேறு சில காரணங்களால் இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்க முடியவில்லை” என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “கரீனா சோப்ரா தான் இன்ஸ்பிரேஷன். சந்தானம் கூட ஒரு படத்தில் லேடி கெட்டப்பில் சூப்பராக நடித்து அசத்தி இருப்பார். லேடி கெட்டப்பில் நடித்தது ரொம்ப கஷ்டம். அன்றைக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அப்போது தான் பெண்களின் கஷ்டம் எனக்கு புரிந்தது. இது தான் எனக்கு 4வது படம். இதை முடிக்கவே ஒரு வருடமானது” என்றார்.

பின்னர், இயக்குநர் இளன் பேசுகையில், “ரொம்ப எமோஷனலான மொமன்ட். எல்லோருக்கும் ஒரு கனவு இருக்கும். அந்த கனவை நோக்கி பயணிக்கும் எல்லோருமே ஸ்டார் தான். அதில் யாரையும் காயப்படுத்த கூடாது. 1980-இல் 20 வயது பையன் மதுரையில் இருந்து சென்னைக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார் என்று கதையை தனது அப்பாவை வைத்து துவக்கியதாக பேசியவர், நம் கனவை நாம் தனியாக ஜெயிக்க முடியாது. அதற்கு நிறைய பேரின் ஆசிர்வாதம், உதவி வேண்டும்.

யுவன் சங்கர் ராஜா துபாயில் இருப்பதால் வர முடியவில்லை. ஆனால், அவர் இசை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரை மாதிரியான மனிதர் என் வாழ்க்கையில் கிடைத்தது ஆசிர்வாதம் என்று நினைக்கிறேன். கவின்கிட்ட கதையைச் சொன்னதும், இந்த கதையில் வந்த காட்சிகள் என் வாழ்க்கையிலும் நடந்துள்ளதாக கவின் என்னிடம் சொன்னார். தினமும் ஷூட்டிங்கில் சர்ப்ரைஸ் பண்ணிக் கொண்டே இருப்பார். இந்த படத்தின் எனர்ஜி லவ் தான். படத்தில் சிறிய சிறிய சர்ப்ரைஸ் இருக்கிறது” என்றார்.

நிகழ்ச்சியில் நடிகர் பாண்டியன், தன் மகனான இயக்குநர் இளனை சுட்டி காட்டி பாராட்டி பேசியவர், “நான் ஸ்டில்ஸ் ரவியிடம் உதவியாளராக இருந்த போது, ஒரு படத்தில் இயக்குநரின் உதவியாளர் ஒருவர், இந்த மூஞ்சிய வெச்சுட்டு நடிக்கப் போறியா என்று பேசினார். அப்போது நான் போய் அழுது விட்டேன்.

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் தான் மதுரையில் இருந்து சென்னைக்கு வந்ததாகவும், ஆனால் பின்னர் நடிக்க வேண்டும் என்று ஆசையில் கற்றுக்கொண்டு நடித்ததாகவும் கூறினார். ராஜா ராணி படம் நடிக்கும் போது போட்டோகிராபர் ஷூட்டுக்கு 75 ஆயிரம் தருவதாக கூப்பிட்டாங்க.

ஆனால், அப்போது எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும், 3 ஆயிரத்து 500 ரூபாய் தான் கொடுத்தார்கள். நாளைய இயக்குநரில் கூட 5 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள். காசை விட எனக்கு நடிப்பு தான் முக்கியம் என்று இருந்ததால் நடித்ததாக கூறி மேடையில் நினைவு கூர்ந்தார்.

இதையும் படிங்க: விரைவில் ரஜினிகாந்த் பயோபிக்.. ரஜினியாக நடிக்கப்போவது யார்? - Rajinikanth Biopic

Last Updated : May 2, 2024, 9:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.