ETV Bharat / entertainment

“அட்ஜஸ்மெண்ட் கட்டாயம்”.. மலையாளத் திரையுலகின் அதிர்ச்சிகரமான ஹேமா கமிஷன் அறிக்கை! - Justice Hema Committee report

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 20, 2024, 4:59 PM IST

Justice Hema Committee report: மலையாள திரைத்துறையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் குறித்து நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat)

திருவனந்தபுரம்: கேரள அரசு, நீதிபதி ஹேமா கமிஷன் மூலம் மலையாள திரைத்துறையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளது. மலையாள திரையுலகில் casting couch (பட வாய்ப்புக்காக பாலியல் ரீதியாக தவறாக நடத்துவது) பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது.

இதுகுறித்து கேரளா அரசிடம், நீதிபதி ஹேமா கமிஷன் கடந்த டிசம்பர் 31, 2019ஆம் ஆண்டு அறிக்கை சமர்பித்தது. இந்நிலையில், நேற்று 233 பக்கம் கொண்ட நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கையை கேரள அரசு வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை வேண்டி பத்திரிகையாளர் உட்பட 5 பேர் அரசிடம் கோரிக்கை விடுத்த நிலையில், அவர்களிடம் இந்த அறிக்கையின் நகல் கொடுக்கப்பட்டுள்ளது.

நீதிபதி ஹேமா கமிஷன் மலையாள சினிமாவில் பெண்கள் சந்திக்கும் பிரச்னை குறித்து ஆராய உருவாக்கப்பட்டது. நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய கண்டுபிடிப்புகள்;

  • பாலியல் ரீதியாக ஒத்துழைக்காத நடிகைகளுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவது.
  • பட வாய்ப்புக்காக பாலியல் ரீதியாக ஒத்துழைப்பது.
  • இந்த விவகாரத்தில் முக்கிய நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் குற்றவாளிகளாக உள்ளனர்.
  • மலையாள சினிமாவில் ஆண் ஆதிக்கம் கொண்டதாக இருப்பது.
  • பாலியல் ரீதியாக ஒத்துழைக்காத பெண்களுக்கு வேண்டுமென்றே நடிப்பு சரியில்லை என அதிக காட்சிகளில் நடிக்க வைப்பது, குறிப்பாக ஒரு சில நடிகைகளுக்கு தண்டனையாக 17 காட்சிகளில் நடிக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
  • நடிகைகள் ஒத்துழைக்க வேண்டும் என்ற கருத்து மலையாள சினிமாவில் பொதுவான ஆண் நடிகர்கள் மத்தியில் உள்ளது.
  • முக்கிய கதாபாத்திரத்தில் இளம் நடிகைகள் மட்டும் நடிக்க வைக்கப்படுகின்றனர்.
  • நடிகைகள் ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும், இல்லையென்றால் ஓரம்கட்டப்படுவர்.
  • இதுகுறித்து போலீசில் புகார் அளித்தால் குறிப்பிட்ட நடிகைக்கும், அவரது குடும்பத்தார் உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்துவது.
  • மலையாளத் திரைத்துறையை குற்றவாளிகள் கட்டுப்படுத்தி வருகின்றனர்.
  • மலையாள திரைத்துறையில் ஒத்துழைப்பு அளிக்கும் நடிகைகளை ரகசியமான வார்த்தைகள் மூலம் அழைக்கின்றனர்.
  • நடிகைகள் இந்த பிரச்னை குறித்து புகார் அளிக்க அஞ்சுகின்றனர்.
  • இந்த கமிஷன் மூலம் நடிகைகள் பலர் அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டனர்.
  • இந்த பிரச்னையில் வெளியான தகவல்கள் கமிஷன் உறுப்பினர்களை வியப்புக்குள்ளாக்கியது
  • இந்த கமிஷன் மூலம் பல நடிகைகள் பயத்தினால் பாலியல் தொல்லை குறித்து போலீசிடம் புகார் கொடுக்கவில்லை என்பது தெரியவந்தது.
    ஈடிவி பாரத் தமிழ்நாடு
    ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: சோ ராமசாமி மனைவி சௌந்தரா காலமானார்! - cho ramasamy wife passed away

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.