சென்னை: இயக்குநர் மற்றும் நடிகருமான கே.எஸ்.ரவிக்குமாரின் ஆர்.கே.செல்லுலாய்ட்ஸ் (RK Celluloids) நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகி உள்ள படம் 'ஹிட்லிஸ்ட்'. இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா மற்றும் நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் நடிக்கும் ஹிட் லிஸ்ட் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில், இயக்குநர்கள் கே.எஸ். ரவிக்குமார், பார்த்திபன், மிஷ்கின், பாக்கியராஜ், எழில், பேரரசு, தேசிங்கு பெரியசாமி, சிறுத்தை சிவா, கார்த்திக் சுப்புராஜ், பி.வாசு, ஆர்.வி.உதயகுமார் மற்றும் நடிகர்கள் சந்தான பாரதி, ஜெயம் ரவி, ஜீவா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, இந்த நிறுவனம் சார்பில் கமல்ஹாசன் நடித்த 'தெனாலி' மற்றும் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 'கூகுள் குட்டப்பா' ஆகிய திரைப்படங்கள் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
நிகழ்ச்சியில், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசுகையில், “வருங்கால இசையமைப்பாளர் மிஷ்கின். கூகுள் குட்டப்பா படம் தயாரித்த போது இப்படம் குறித்து பேச ஆரம்பித்தோம். விக்ரமன் கதையை கேட்டார். அதன் மூலமாகவே இந்த படம் உருவானது” இவ்வாறு அவர் பேசினார்.
அதனைத்தொடர்ந்து, நிகழ்ச்சியில் இயக்குனர் பார்த்திபன் பேசுகையில், “ ஹிட் லிஸ்ட் என்பது தாயின் கனவு. என்னுடைய படம் எப்பொழுதும் லேட்டா தான் பிக்கப் ஆகும். விஜய் கனிஷ்காவை பார்க்கும் பொழுது ஒரு இளம் அஜித்தை பார்ப்பது போல் உள்ளது. அடுத்த படத்திற்கு அவர் 10 கோடி சம்பளம் கேட்கலாம். நடிகர் கவின் செய்தியாளர் சந்திப்பில் சம்பளம் குறித்த கேள்விக்கு தடுமாறினார். ஆனால், நீங்கள் இப்போதே பதிலை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்” இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர், நடிகர் ஜெயம் ரவி பேசுகையில், “எனக்கு எப்படி ஜெயம் ரவி என்ற பெயர் ஜெயம் படத்தின் காரணமாக வந்தது போன்று, ஹிட் லிஸ்ட் படம் அமையும் என்று எதிர்பார்க்கிறேன். ஹிட் லிஸ்ட்டை ஹிட் ஆக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. எங்கள் பழுவேட்டரையரை நான் எப்படி மறக்க முடியும். உங்கள் நல்ல மனதுக்கு என்றும் சுப்ரீம் ஸ்டார் ஆக இருப்பீர்கள்” என சரத்குமாரை வாழ்த்தினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் நடிகர் ஜீவா பேசுகையில், “இயக்குநர் விக்ரமன் ‘பெரும்புள்ளி’ என்ற படத்தில் என்னை அறிமுகப்படுத்தினார். இந்த படத்தில் ஹீரோயின் இல்லையா என்று கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து, இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், “இளையராஜாவையும், மணிரத்னத்தையும் விமர்சிக்கும் தகுதி எனக்கு இருக்கிறது . போன மேடையில் சினிமாக்கு போங்க, கோயிலுக்கு போகாதீங்க என்று சொன்னதை பெரிய விஷயமாக ஆக்கிவிட்டார்கள். நான் கோயில் என்று சொன்னது சர்ச்யையும், மசூதியையும் சேர்த்து தான் சொன்னேன். நான் பிறந்தது ஒரு இந்து குடும்பம், வளர்ந்தது முஸ்லீம் குடும்பம், என் மனைவி ஒரு கிறிஸ்துவர். நம் வாழ்க்கை ஒரு செல்லுக்குள் அதாவது, 30 வினாடிக்குள் அடங்கி விடுகிறது. அதனால் எல்லோரும் தியேட்டரை மறந்து விட்டார்கள்.
தொடர்ந்து பேசிய அவர், என்னுடைய கடைசி பிறந்த நாளுக்கு பார்த்திபனை அழைத்தேன். எனக்கு ஒரு சிறிய பரிசு கொடுத்தார். பிறகு சிறிய பதிவு போட்டு இருந்தார். அந்த பதிவில் நான் அவரை தவறாக பேசியதாகவும், என்னுடன் இருந்த ஒருவர் அவரிடம் சென்று உங்களை பற்றி தவறாக பேசிவிட்டார் என்று சொல்லி அதனால் அவர் வருத்தமடைந்ததாக சொல்லி இருக்கிறார்.
ஒருவேளை நான் அப்படி பேசி இருக்கலாம். நீங்களும் ஒரு கடவுள் தான். கோழைகளின் வார்த்தைகளை நம்பாதீர்கள். நான் தெரியாமல் ஏதாவது பேசியிருந்தால் நான் மன்னிப்பு கோருகிறேன். பேசும்பொழுது நீங்கள் தப்பாக பேசினீர்கள் என்று சொல்பவர் நல்லவர். மற்றவரிடம் சொல்பவர் கோழைகள். உங்கள் படங்களை தனி அறையில் விமர்சிப்பதற்கு எனக்கு உரிமை உண்டு” என்றார்.
பின்னர் நடிகர் சரத்குமார் பேசுகையில், “முன்னாள் முதல்வர் கலைஞர் முன்னிலையில், அவர்கள் 175 ஆவது நாள் பட விழாவை இங்கு கொண்டாடினோம். அப்போது ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணம் உடற்பயிற்சி செய்வதால் . இயக்குனர் மிஷ்கின் பேசும்போது அனைவரும் இறுக்கமாக இருந்தீர்கள். இது சந்தோஷமான ஒரு நிகழ்வு இது ஒரு குடும்ப விழா. சூரியவம்சம் 2 பண்ணலாம் என்று பேசியிருக்கிறோம். அது இன்னும் சரியாக அமையவில்லை. எனக்கு 150 வயது வரை நான் நடிப்பேன்” என்று பேசினார்.
இதையும் படிங்க: "கோவை மத்திய சிறை தான் உனக்கு சமாதி" என சிறைக் காவலர் மிரட்டல்? - சவுக்கு சங்கர் பகீர் குற்றச்சாட்டு - Savukku Shankar