ETV Bharat / entertainment

“என்னத் தேடி தமிழ் கண்டிப்பா வருவான்”.. கடைசி உலகப் போரின் க்ளிம்ஸ் வெளியானது! - Kadaisiulagapor Glimpse is out now - KADAISIULAGAPOR GLIMPSE IS OUT NOW

Kadaisiulagapor Glimpse: ஹிப் ஹாப் தமிழா ஆதி தயாரித்து இயக்கி நடிக்கும் கடைசி உலகப் போரின் க்ளிம்ஸ் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

கடைசி உலகப் போர் போஸ்டர்கள்
கடைசி உலகப் போர் போஸ்டர்கள் (Credits - hiphop tamizha X page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 19, 2024, 11:03 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என பல திறமைகளுடன் வலம் வருபவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. இவரது நடிப்பில் சமீபத்தில் பிடி சார் படம் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில், ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கி, தயாரித்து நடிக்கும் கடைசி உலகப் போர் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். இப்படத்தில் நாசர், நட்டி (நடராஜ்), அனகா, அழகன் பெருமாள், ஹரிஷ் உத்தமன், முனிஷ்காந்த், சிங்கம்புலி, இளங்கோ குமரவேல், தலைவாசல் விஜய், மகாநதி சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அந்த வகையில், இன்று (ஜூலை 19) படத்திலிருந்து க்ளிம்ஸ் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. க்ளிம்ஸ் தொடக்கத்தில் போரால் பாதிக்கப்பட்டு சீர்குலைந்த கட்டடங்களும், அதையொட்டி நீளும் காட்சிகளும் மிரட்டுகின்றன. ஆங்காங்கே குண்டுகள் வெடித்து சிதைந்த கட்டடங்கள் சிதறிக்கிடக்கும் பிணங்கள், துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர் என க்ளிம்ஸ் மூவ ஆக அடுத்தடுத்து

மக்களை அடைத்து துன்புறுத்தும் காட்சிகள், வாழ வழியற்று தவிக்கும் மக்கள் என காட்சிகள் மனதை நொறுக்குகின்றன. படத்தின் கலர் டோனை ஆதி கையாண்டுள்ளது அனைவரையும் பிரமிக்க வைக்கிறது. பல படங்களை இயக்கிய அனுபவம் கொண்டவராக ஆதி கலர் டோனை கையாண்டுள்ளார் என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த க்ளிம்ஸில் மாஸான டயலாக் ஒன்றை நாயகி சொல்கிறார். அது என்னவென்றால் “என்னத் தேடி தமிழ் கண்டிப்பா வருவான்” என டயலாக் சொல்ல ரசிகர்கள் மத்தியில் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: விண்டேஜ் லுக்கில் அஜித் - த்ரிஷா ஜோடி.. விடாமுயற்சி அப்டேட் கொடுத்த படக்குழு! - Vidaa muyarchi 3rd look poster out

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.