ETV Bharat / entertainment

“கோடி ரூபாய் கொடுத்தாலும் இதை மட்டும் செய்ய மாட்டேன்" - ஜி.வி.பிரகாஷ் குமார் கூறியது என்ன? - ஜி வி பிரகாஷ் குமார்

G.V.Prakash Kumar: குளிர் பானம், சூதாட்டம் போன்ற விளம்பரங்களில் நடிக்க பலமுறை, பல கோடி ரூபாய் சம்பளத்துடன் அழைப்பு வந்தது, ஆனால் அதையெல்லாம் மறுத்துவிட்டேன் என ஜி.வி.பிரகாஷ் குமார் தெரிவித்தார்.

“கோடி ரூபாய் கொடுத்தாலும் இதை மட்டும் செய்ய மாட்டேன்" - ஜி.வி.பிரகாஷ் குமார் கூறியது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 9, 2024, 12:20 PM IST

Updated : Feb 10, 2024, 5:11 PM IST

சென்னை: வேளச்சேரியிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் 'ஸ்டார் டா' என்ற திரைக் கலைஞர்களுக்கான (இந்தியாவின் பிரீமியர் டேலண்ட் மேனேஜ்மென்ட் பிளாட்பார்ம்) செயலி அறிமுக விழா நடைபெற்றது. இந்த ஸ்டார் டா என்ற செயலி, சினிமாவில் வாய்ப்பு தேடி வருவர்களுக்கென்றே பிரேத்யேகமாக உருவாக்கப்பட்ட செயலி ஆகும்.

இதன் மூலம் நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், பாடலாசிரியர், இசையமைப்பாளர் போன்றவர்களைத் தேர்வு செய்து கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது. இதனைத் தொடங்கி வைப்பதற்காக நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார், இயக்குநரும், நடிகருமான அருண்ராஜா காமராஜ், நடிகை நிவேதிதா சதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் மேடையில் பேசிய இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ், "நான் சிறுவயதிலிருந்தே திரைத்துறையில் உள்ளேன். நான் புதிய முகங்களுடன் அதிகம் பணியாற்றியுள்ளேன். குறிப்பாக வெற்றிமாறன், அட்லீ, ஏ.எல்.விஜய் போன்ற புது முகங்களுடன் பணியாற்றுவது எனக்கு மிகவும் பிடிக்கும். என்னுடைய 25 படங்களில், 17 படங்கள் புது முகங்கள்தான்.

மேலும் எனக்கு பலமுறை குளிர் பானம், சூதாட்டம் போன்ற விளம்பரங்களில் நடிக்க பல கோடி ரூபாய் சம்பளத்துடன் அழைப்பு வந்தது. நான் அதையெல்லாம் மறுத்து விட்டேன். ஏனென்றால் கோடி ரூபாய் கொடுத்தாலும், இது போன்ற விளம்பரங்களில் நான் நடிக்க மாட்டேன்.

ஆரம்ப காலகட்டத்தில் சினிமாக்கு வர விரும்புவர்கள் எங்கு செல்வது, யாரை பார்ப்பது போன்ற கேள்விகள் அவர்களுக்குள் இருக்கும். அதற்கெல்லாம் இந்த செயலி பதிலாக இருக்கும் என்று நினைக்கிறேன். இனி வரும் காலங்களில் என்னுடைய படங்களுக்கும் இந்த செயலி மூலமே நடிகர்களைத் தேர்வு செய்ய முயற்சிக்கிறேன் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'கடைசி விவசாயி' பட இயக்குநர் மணிகண்டன் வீட்டில் திருட்டு; தேசிய விருதுகளையும் எடுத்துச் சென்றதாக தகவல்!

Last Updated : Feb 10, 2024, 5:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.