ETV Bharat / entertainment

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் 'பேபி & பேபி' திரைப்படம்! - Baby and Baby movie - BABY AND BABY MOVIE

Baby & Baby movie: அறிமுக இயக்குநர் பிரதாப் இயக்கத்தில், நடிகர் ஜெய், சத்யராஜ், யோகிபாபு இணைந்து நடிக்கும் பேபி & பேபி படத்தின் இறுதிகட்ட படபிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Baby & Baby movie
பேபி & பேபி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 23, 2024, 1:58 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் 'சுப்பிரமணியபுரம்', 'எங்கேயும் எப்போதும்' ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றவர் நடிகர் ஜெய். இவர் தற்போது ஜிபிஎஸ் கிரியேஷன்ஸ் சார்பில் G.P.செல்வகுமார் தயாரிப்பில், யுவராஜ் பில்ம்ஸ் சார்பில் B.யுவராஜ் வெளியிடவுள்ள பேபி & பேபி படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் ஜெய் உடன் சத்யராஜ் மற்றும் யோகி பாபு நடித்துள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குநர் பிரதாப் இயக்கியுள்ளார். அழகான ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படம் உருவாகி உள்ளது. தமிழ் சினிமாவில் ரசிகர்கள் குடும்பங்களோடு இணைந்து ரசிக்கும் படங்கள் வருவது அரிதாகிவிட்டது. அந்த வகையில், குடும்ப உறவுகளின் பின்னணியில், குழந்தைகளை மையப்படுத்தி, அனைத்து தரப்பினரும் கொண்டாடும் வகையில் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

காமெடியும், எமோஷனும் சம அளவில் கலந்து ஒரு அசத்தலான ஃபேமிலி எண்டர்டெயினராக (Family Entertainer) இப்படத்தை உருவாக்கி வருகிறார், அறிமுக இயக்குநர் பிரதாப். இப்படத்தில் ஜெய் நாயகனாக நடிக்க, நடிகர் சத்யராஜ் திருப்புமுனை பாத்திரத்திலும், யோகி பாபு மிக முக்கிய பாத்திரத்திலும் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நாளைய தீர்ப்பு படத்தில், விஜய்யின் முதல் கதாநாயகியாகவும் மற்றும் பவித்ரா படத்தில் அஜித்தின் ஜோடியாகவும் நடித்த, நடிகை கீர்த்தனா செல்வகுமார் இப்படத்தில் ஜெய்யின் அம்மாவாகவும், நடிகர் சத்யராஜுக்கு ஜோடியாகவும் நடித்து, மீண்டும் திரையில் களமிறங்கி உள்ளார். நடிகை பிரக்யா நாக்ரா ஜெய்யின் ஜோடியாக நடிக்கிறார்.

இவர்களுடன் ஆனந்தராஜ், ஸ்ரீமன், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, இளவரசு, சிங்கம்புலி, நிழல்கள் ரவி, கே.பி.ஒய்.ராமர், கே.பி.ஒய்.தங்கதுரை, ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், சேசு ஆகியோர் இணைந்து நடிக்கின்றார்கள். மற்றொரு நாயகியாக புதுமுகம் சாய் தன்யா நடிக்கின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள நிலையில், இதன் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னை சுற்று வட்டார பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் படமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் படக்குழு தீவிரம் காட்டி வருகின்றது.

ஜிபிஎஸ் கிரியேஷன்ஸ் சார்பில் G.P. செல்வகுமார் பிரமாண்டமாக தயாரிக்கும் இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் D.இமான் இசையமைக்கிறார். T.P.சாரதி ஒளிப்பதிவு செய்கிறார். யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் B.யுவராஜ், தயாரிப்பாளர் G.P.செல்வகுமார் இணைந்து இப்படத்தை வெளியிடுகிறார்கள். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் (First Look) மற்றும் டீசர் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது.

இதையும் படிங்க: 'கோதாவிலும் இறங்கத் தயார்..! விஜய் மட்டுமல்ல; யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்' - நடிகர் விஷால்! - Actor Vishal

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.