ETV Bharat / entertainment

"உதயம் தியேட்டர்ல என் இதயத்த தொலைச்சேன்" - உதயம் திரையரங்கம் குறித்து நினைவலைகளை பகிர்ந்த திரைப்பிரபலங்கள்!

Udhayam Theater Closure: விரைவில் உதயம் திரையரங்கம் மூடப்பட உள்ள நிலையில், உதயம் திரையரங்கத்துடனான தங்களது நினைவுகளை ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்துடன் சினிமா பிரபலங்கள் பகிர்ந்து கொண்டனர்.

உதயம் திரையரங்கம் குறித்து நினைவலைகளை பகிர்ந்த திரைப்பிரபலங்கள்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 16, 2024, 9:03 PM IST

Updated : Feb 17, 2024, 10:45 AM IST

உதயம் திரையரங்கம் குறித்து நினைவலைகளை பகிர்ந்த திரைப்பிரபலங்கள்

சென்னை: சென்னையின் அடையாளங்களின் ஒன்றான உதயம் திரையரங்கம் மூடப்பட உள்ளதாக வெளியாகும் தகவல்கள் சினிமா ரசிகர்களை மட்டுமின்றி நடிகர்களையும் வருத்தப்பட வைத்துள்ளது எனலாம். சென்னை அசோக் பில்லரில் அமைந்துள்ள இந்த திரையரங்கம் 1983ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. கடந்த 41 ஆண்டுகளாக சினிமா ரசிகர்களை மகிழ்வித்த இந்த திரையரங்கம் வரும் மார்ச் மாதத்துடன் தனது ஓட்டத்தை நிறுத்திக் கொள்கிறது.

கால மாற்றம், மல்டி பிளக்ஸ் திரையரங்கம், ஓடிடி தளங்களின் ஆதிக்கம், ரசிகர்களின் ரசனை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் தனி திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் குறைந்து காணப்படுகிறது. இதனால் நஷ்டத்தை சமாளிக்க முடியாமல் ஏராளமான தனி திரையரங்குகள் மூடப்பட்டு வருகின்றன. சென்னையில் தேவி காம்ப்ளக்ஸ், உதயம் காம்ப்ளக்ஸ் ஆகியவை தான் பழமையான காம்ப்ளக்ஸ் தியேட்டர்கள்.

உதயம் திரையரங்கம் அஸ்தமனம்: உதயம் திரையரங்கில் உதயம், சந்திரன், சூரியன், மினி உதயம் என இருந்தன. வடபழனி, அசோக் நகர், சைதாப்பேட்டை, மாம்பலம், ஈக்காட்டுத்தாங்கல், கே.கே.நகரில் உள்ள மக்களுக்கு இதுதான் வசதியான தியேட்டராக இருந்து வந்தது. நடிகர் அஜித் நடித்த ஆனந்தப் பூங்காற்றே படத்தில் வரும் உதயம் தியேட்டருல என் இதயத்த தொலச்சேன் என்ற பாடல் மிகப் பிரபலம்.

இப்படி பல படங்களில் இந்த இடம் வந்த, சென்னையில் இருக்கும் பெரும்பாலான மக்களின் வாழ்வில் பிரிக்க முடியாத அங்கமாக மாறியுள்ள உதயம் திரையரங்கம் தற்போது மூடப்பட உள்ளது அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள பிரபல உதயம் திரையரங்கம் அஸ்தமனாவது குறித்து திரை பிரபலங்கள் ஈடிவி பாரத்துக்கு பிரத்யேகமாக தங்களது நினைவலைகளை பகிர்ந்துள்ளனர்.

ஐகானிக் திரையரங்கம்: நடிகர் சாந்தனு கூறியதாவது, “உதயம் திரையரங்கம் மூடப்படுவது என்பது ஒரு பாரம்பரியமே முடிவுக்கு வருகிறது எனலாம். ப்ளூ ஸ்டார் படத்தின் வெளியீட்டின் போது எல்லாம் உதயம் தியேட்டரில் என் இதயத்தை தொலைத்தேன் என்று பாடிக்கொண்டு இருப்போம். உதயம் திரையரங்கில் எனக்கு மட்டுமல்ல சினிமாவில் இருக்கும் எல்லோருக்கும், தமிழ் ரசிகர்களுக்கும், ஒரு ஐகானிக் திரையரங்கம்.

சென்னைக்கு மிக முக்கியமான மையம் அது. அது இன்று மூடப்படுகிறது என்பது மிகவும் கஷ்டமாக உள்ளது. அதனை மூடாமல் புதுப்பித்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். பல பெரிய நடிகர்களின் படங்களை அங்கு நான் பார்த்துள்ளேன். ரொம்பவும் அதனை மிஸ் பண்ணுறேன். அப்பா இயக்கிய படங்களை சிறுவனாக இருக்கும்போது அங்கு சென்று பார்த்துள்ளேன். மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் நிறைய வந்தாலும் தனி திரையரங்குகளில் பார்க்கும் அனுபவம் வேறு எதிலும் வராது” தெரிவித்தார்.

அதற்கு எதுவும் ஈடுகொடுக்க முடியாது: நடிகர் பிரித்வி பாண்டியராஜன் பேசும் போது, “சென்னையில் மிகவும் முக்கியமான திரையரங்குகளில் ஒன்றான உதயம் திரையரங்கம் மூடப்படுவதாக வரும் செய்தியை அறிந்தேன். பயங்கரமான நினைவலைகள் வருகிறது. என்னுடைய படங்கள் அங்கு ஓடியுள்ளது. மக்களுடன் அமர்ந்து நிறைய படங்களை பார்த்துள்ளேன்.

உண்மையில் மறக்க முடியாத தியேட்டர். நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன். மல்டிபிளக்ஸ் நிறைய வந்தாலும் இது போன்ற தனி திரையரங்குகளில் படம் பார்ப்பது தனி அனுபவம். அதற்கு எதுவும் ஈடுகொடுக்க முடியாது. இது ஒருநாள் மாறும் என்று நம்புகிறேன். ஓடிடி வரவு அதிகரித்தாலும் நல்ல படங்கள் வந்தால் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் வரும் மக்கள் ஆதரவு எப்போதும் இருக்கும்” என்றார்.

திரையரங்குகளை இடிக்காதீங்க: நடிகர் கலையரசன் பேசும் போது, “உதயம் திரையரங்கம் பயங்கர எமோஷனலான இடம் . சென்னையில் ஆசையாக சில திரையரங்குகள் இருக்கும். நிறைய படங்களை உதயம் தியேட்டரில் தான் முதல்நாள் முதல் காட்சி பார்ப்பேன். கூட்டத்தில் வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி பார்த்துள்ளேன். 7ஜி ரெயின்போ காலனி, மின்னலே, புதுப்பேட்டை, எனது படம் மெட்ராஸ் என பல படங்களை பார்த்துள்ளேன்.

என் அப்பாவின் நண்பர் அங்கு வேலை பார்த்தார். அவரிடம் கேட்டு டிக்கெட் வாங்கி பார்த்துள்ளேன். அந்த ஏரியாவுக்கு அதுதான் அடையாளம். நிறைய நினைவுகள் உள்ளது. கொஞ்சம் எமோஷனலாக இருக்கிறது. சினிமாவுக்கும் மிகப்பெரிய இழப்புதான். மற்ற திரையரங்குகளை இடிக்காதீங்க. சென்னையில் மிக முக்கியமான தியேட்டர் உதயம். நான் மட்டுமல்ல மொத்த சினிமாவே மிஸ் பண்ணும்” என்றார்.

எனது வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: நடிகர் பரத் கூறியதாவது “என்ன சொல்வதென்று தெரியவில்லை திகைத்து போய் உள்ளேன். எனது திரைவாழ்வில் எனது அனைத்து படங்களும் உதயம் தியேட்டரில் வந்துள்ளது. சென்னையின் ஒரு அடையாளமாக உதயம் திரையரங்கம் இருந்துள்ளது. அது மூடப்பட உள்ளது என்று கேட்கும் போது வருத்தமாக உள்ளது.

ஆனால் ஒன்று செய்ய முடியாது. எனது வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை இந்த தியேட்டர் ஏற்படுத்தியுள்ளது. பெரிய படங்களுக்கு மட்டுமே ரசிகர்கள் வருகிறார்கள். சிறிய பட்ஜெட் படங்களை திரையரங்குகளில் சென்று பார்த்தால் தான் நடிகர்களுக்கு மவுசு ஏறும்” என்றார்.

எத்தனையோ சூப்பர் ஸ்டார்களை உருவாக்கிய திரையரங்கம்: ஆடை வடிவமைப்பாளர் மற்றும் நடிகர் சத்யா பேசும் போது, “சென்னைக்கு வருபவர்களுக்கு உதயம் திரையரங்கம் தான் அடையாளம். ஒரு படத்தின் வெற்றி தோல்வியை தெரிந்து கொள்ள உதயம் திரையரங்கம் தான் சென்று பார்க்க வேண்டும் என்று இயக்குநர் சசிகுமார் சொல்வார். அந்த தியேட்டர் இல்லை என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது” என்றார்.

இப்படி சென்னை மக்களை 40 ஆண்டுகளுக்கும் மேல் மகிழ்வித்து வந்த உதயம் திரையரங்கம் வெகுவிரைவில் அஸ்தமனமாக உள்ளது என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. எத்தனையோ சூப்பர் ஸ்டார்களை உருவாக்கிய உதயம் திரையரங்கம் இருந்த இடத்தில் இன்னும் சில வருடங்களில் வானலாவிய அடுக்கு மாடி குடியிருப்பு வந்துவிடும்.

ஆயிரம் பேர் ஒன்றாக அமர்ந்து சினிமாவை கொண்டாடிய இடம். ஆயிரம் வீடுகளின் தொலைக்காட்சி பெட்டியாக சுருங்கினாலும் சினிமா உள்ளவரை சினிமா ரசிகர்களின் உள்ளத்தில் உதயம் திரையரங்கம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு திடீர் சிக்கல்!

Last Updated : Feb 17, 2024, 10:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.