சென்னை: டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ராணா டக்குபதி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் 'வேட்டையன்'. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள 'வேட்டையன்' படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ஆயுத பூஜை விடுமுறைக்கு தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள நிலையில், முதல் சிங்கிள் 'மனசிலாயோ' பாடல் வெளியாகி ரசிகர்கள் அனைவரையும் வைப் செய்ய வைத்தது. மேலும், சமூக வலைத்தளத்தில் பலர் ரீல்ஸ் செய்து வெளியிட்டனர். இந்நிலையில், வேட்டையன் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது.
Brace yourselves for the glimpse 🥁 of VETTAIYAN 🕶️ Audio and Prevue releasing TODAY. 🤩 Let the beats and tunes take centre stage! 🏟️#Vettaiyan 🕶️ Releasing on 10th October in Tamil, Telugu, Hindi & Kannada!@rajinikanth @SrBachchan @tjgnan @anirudhofficial @LycaProductions… pic.twitter.com/Y3aIIJaFyH
— Lyca Productions (@LycaProductions) September 20, 2024
வேட்டையன் படத்தின் இரண்டாவது சிங்கிள் 'Hunter Vantaar' பாடல் இன்று வெளியாகியுள்ளது. இது ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ஹுகும் பாடல் போன்று ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இப்படத்தில் அமிதாப் பச்சன் முதல் பல நட்சத்திரங்கள் நடித்துள்ள நிலையில், சமீபத்தில் வெளியான ஃபகத் ஃபாசில், அமிதாப் பச்சன் ஆகியோரது கதாபாத்திர அறிமுக வீடியோ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், இன்று வேட்டையன் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் ரஜினியின் பேச்சைக் கேட்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். கடந்த முறை ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்ன கழுகு, காகம் கதை பேசுபொருளானது. ரஜினி, விஜய் ரசிகர்கள் இடையே சமூக வலைத்தளத்தில் பெரும் மோதலை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக ரஜினி, விஜய் இருவரும் அடுத்ததடுத்து தாங்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் பேசியிருந்தனர்.
இதையும் படிங்க: உதயநிதி தொடர்பான கேள்வி.. கோபமாக பதிலளித்த நடிகர் ரஜினிகாந்த்.. சென்னை ஏர்போர்ட்டில் நடந்தது என்ன? - Rajinikanth about politics
டி.ஜே.ஞானவேல் கடைசியாக இயக்கிய ஜெய்பீம் திரைப்படம் அரசியல் ரீதியாக பல பிரச்னைகளைச் எதிர்கொண்டது. தற்போது டி.ஜே.ஞானவேல் ரஜினிகாந்தை வைத்து வேட்டையன் படத்தை இயக்கியுள்ள நிலையில், இப்படம் எப்படி இருக்கும், இது குறித்து இன்று ரஜினிகாந்த் என்ன பேச இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.