ETV Bharat / entertainment

பாலு மகேந்திரா அன்று கூறியது.. வெற்றிமாறனின் திருப்புமுனையும், திகட்டாத திரைப்படங்களும்! - vetrimaaran birthday

Vetrimaaran birthday: பிரபல இயக்குநர் வெற்றிமாறன் இன்று தனது 49வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

வெற்றிமாறன் பிறந்தநாள்
வெற்றிமாறன் பிறந்தநாள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 4, 2024, 1:21 PM IST

சென்னை: தமிழ் சினிமா எத்தனையோ இயக்குநர்களை பார்த்துள்ளது. அவற்றில் ஒரு சிலரே தோல்வியே இல்லாமல் ரசிகர்களால் கொண்டாடப்படும் இயக்குநர்களாக வலம் வருகின்றனர். அந்த வகையில், நமது பிடித்த ஆதர்ச நாயகன் இந்த இயக்குநரது படத்தில் நடிக்கமாட்டாரா என ஏங்க வைப்பவர் வெற்றிமாறன்.

இவர் சாதாரண கதையை ரத்தமும், சதையுமாக காட்சிப்படுத்தி படம் பார்ப்பவர்களுக்கு புதிய அனுபவத்தைக் கொடுப்பவர். பாலு மகேந்திராவின் உதவி இயக்குநராக பணியாற்றிய வெற்றிமாறன், 'பொல்லாதவன்' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து 'ஆடுகளம்' படத்தின் மூலமாக தேசிய அளவில் அங்கீகாரம் பெற்றார். 'ஆடுகளம்' படத்தைப் பார்த்த அவரது குருவான இயக்குநர் பாலு மகேந்திரா, “என்னடா இப்படி படம் எடுத்து வச்சுருக்க, நல்ல நடுவர் குழுவாக இருந்தால் உனக்கு ஆறு தேசிய விருது கிடைக்கும்” என்று கூறியுள்ளார். அதேபோல் ஆடுகளம் படம் 6 தேசிய விருதுகளை வென்றது. வெற்றிமாறன் திரைப்படங்கள் பெரும்பாலும் மனித மனங்களின் குரூரத்தை பேசக்கூடியதாகவும், அதிகார வர்க்கத்திற்கு எதிராக கேள்வி எழுப்புவதாகவும் இருக்கின்றன.

வேலூர் ராணிப்பேட்டையைச் சேர்ந்த வெற்றிமாறன், மிகத்தீவிர கிரிக்கெட் வெறியர். இவரின் அப்பா கால்நடை ஆராய்ச்சியாளர், தாய் ஆசிரியை, ஒரு சகோதரி என்று சிறிய குடும்பத்தில் பிறந்த வெற்றிமாறன் திரைத்துறையின் மீது கொண்ட ஆர்வத்தினால் குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி சினிமாவில் பயிற்சி பெறுவதற்காக சென்னை லயோலா கல்லூரியில் சேர்ந்தார்.

அதன் பிறகு திரை உலகத்தில் தன்னை பழக்கப்படுத்திக் கொள்ளும் வெற்றிமாறன், பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக இணைந்தார். பாலு மகேந்திரா இயக்கிய கதை நேரம் தொடரில் பணியாற்றிய வெற்றிமாறனுக்கு நடிகர் தனுஷ் உடன் நட்பு ஏற்பட, தனுஷிடம் தான் உருவாக்கிய கதையை வெற்றிமாறன் கூறியுள்ளார்.

அந்த கதை தனுஷிற்கு பிடித்து போக இருவரும் இணைந்து உருவான படம் தான் 'பொல்லாதவன்'. அந்த படம் கொடுத்த வெற்றி நம் அனைவரும் அறிந்ததே. இளைஞர்களிடம் இந்த படம் மிகப்பெரிய வரவேற்ஐ பெற்றதால், முதல் படத்திலேயே வெற்றிமாறன் ஒட்டுமொத்த திரை உலகின் கவனத்தையும் பெற்றார்.

அதன் பிறகு தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான 'ஆடுகளம்' திரைப்படம் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி சூழலை மிகவும் எளிமையாகவும், சிறப்பாகவும் காட்சிப்படுத்தியிருந்தது. இந்தப் படத்தின் கதாபாத்திர வடிவமைப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.

அதோடு நிற்காமல் 'ஆடுகளம்' 6 தேசிய விருதுகளை வாங்கிக் குவித்தது. அதன் தொடர்ச்சியாக லாக்கப் நாவலை தழுவி வெற்றிமாறன் இயக்கிய 'விசாரணை' திரைப்படம் உலக வெனிஸ் திரைப்பட விழாவில் மனித உரிமைக்கான விருதை பெற்று, உலக அரங்கில் தமிழ்த் திரைப்படம் பாராட்டப்படுவதற்கு காரணமாக அமைந்தது.

இதனையடுத்து, தனுஷ் உடன் வெற்றிமாறன் இணைந்த படம் 'வட சென்னை'. வட சென்னை மக்களுடைய வாழ்வியலோடு கதாபாத்திரங்களை உருவாக்கி அவர்களுக்குள் இருக்கும் அரசியலை தத்ரூபமாக காட்சிபடுத்தியிருந்தார். வடசென்னை இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆர்வமாக காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

மீண்டும் தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் உருவான 'அசுரன்' படமும் பெரிய வெற்றியை பெற்றது. கல்வியின் முக்கியத்துவம் பற்றி பேசிய 'அசுரன்' திரைப்படம் விமர்சன ரீதியாகவும் பாராட்டப்பட்டது. தொடர்ந்து, நாவல்களை திரைப்படமாக எடுப்பதில் வெற்றிமாறனுக்கு நிகர் அவரே தான் எனலாம்.

இதனையடுத்து, காமெடி நடிகராக இருந்த சூரியை கதை நாயகனாக்கி வெற்றிமாறன் இயக்கிய 'விடுதலை' திரைப்படமும் ஒட்டுமொத்த திரையுலகமும் கொண்டாடிய படமாக அமைந்தது. இதன் இரண்டாவது பாகம் இந்தாண்டு டிசம்பரில் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் 'வாடிவாசல்' படத்தை இயக்க உள்ளார். இப்படம் எப்போது தொடங்கும் என்று நீண்ட நாட்களாக ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

தனது 17 ஆண்டு கால திரை வாழ்க்கையில் மிக சொற்ப படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும், ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மத்தியில் தனக்கென்று தனி இடத்தைப் பிடித்துள்ளார் வெற்றிமாறன். எளிய மக்களினுடைய கதையை எதார்த்தமாக காட்சிப்படுத்துவதை தன்னுடைய திறமையாகக் கொண்ட வெற்றிமாறன், அடுத்தடுத்த படைப்புகளும் அவரை மாபெரும் உயரத்திற்கு கொண்டு செல்லும் என்பது மிகையல்ல. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வெற்றிமாறன்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: 'கோட்' ரிலீஸ் கொண்டாட்டத்தில் த.வெ.க கொடியை பயன்படுத்தக் கூடாது - ரசிகர்களுக்கு விஜய் உத்தரவு? - GOAT release celebrations

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.