ETV Bharat / entertainment

இன்று 32 படங்களின் படப்பிடிப்புகள் ரத்து.. ஃபெப்சி அமைப்பு அறிவிப்பு! - chennai shooting cancelled - CHENNAI SHOOTING CANCELLED

chennai shooting cancelled: சர்தார் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் சண்டைப் பயிற்சியாளர் ஏழுமலை உயிரிழந்த நிலையில், அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று சென்னையில் நடைபெறவிருந்த 32 படங்களின் படப்பிடிப்பு மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பெப்சி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை
பெப்சி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 25, 2024, 3:28 PM IST

சென்னை: கடந்த 2022ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் 'சர்தார்'. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகி வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் சர்தார் 2 படப்பிடிப்பு சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்றது.

அப்போது எந்த வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி சண்டைப் பயிற்சியாளர் ஏழுமலை (54) பயிற்சியில் ஈடுபட்டு வந்ததாகவும், எதிர்பாராத விதமாக 20 அடி உயரத்தில் இருந்து ஏழுமலை தவறி விழுந்ததாகவும் கூறப்படுகிறது. உடனடியாக ஏழுமலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 35 வருடங்களாக சண்டை பயிற்சியாளராக பணியாற்றி வரும் ஏழுமலை உயிரிழந்தது சர்தார் 2 படக்குழுவினர் மற்றும் தமிழ் திரைத்துறை கலைஞர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, சர்தார் 2 படப்பிடிப்பின் போது சண்டை பயிற்சியாளர் ஏழுமலை உயிரிழந்ததை தொடர்ந்து, இன்று (ஜூலை 25) ஒருநாள் சென்னையில் நடைபெறவிருந்த 32 படங்களின் படப்பிடிப்பு மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், இதுகுறித்து தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் படப்பிடிப்புகளில் கலைஞர்களின் பாதுகாப்பு வசதிகள் தேவையை வலியுறுத்தி இன்று விழிப்புணர்வு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஃபெப்சி (FEFSI) அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "சண்டைக் கலைஞர்கள் சங்கத்தின் உறுப்பினர் உயிரிழந்தது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கடந்த இரண்டு வருடங்களில் பல சண்டை கலைஞர்கள் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். எனவே படப்பிடிப்பில் பணிபுரியும் போது சண்டை கலைஞர்களுக்கு தகுந்த பாதுகாப்பு கருவிகள், உபகரணங்களை தயாரிப்பு நிறுவனம் ஏற்படுத்தி தர வேண்டும். மேலும், வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் சண்டை கலைஞர்களுக்கு படப்பிடிப்புத் தளங்களில் உரிய பாதுகாப்பு வசதிகள் இருந்தால் மட்டுமே பணிபுரிவார்கள்" என தெரிவித்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: பிரதீப் ரங்கநாதன் பர்த்டே கிப்ட்.. வெளியானது விக்னேஷ் சிவன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்... புதிய டைட்டில் என்ன? - Love Insurance kompany first look

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.