ETV Bharat / entertainment

'மழை பிடிக்காத மனிதன்' படத்திலிருந்து ஒரு நிமிட காட்சி நீக்கம்.. இயக்குநர் விஜய் மில்டன் புகார் எதிரொலியால் நடவடிக்கை! - Mazhai pidikkadha manithan

author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 5, 2024, 11:31 AM IST

Mazhai pidikkadha manithan vijay milton complaint: இயக்குநர் விஜய் மில்டன் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, மழை பிடிக்காத மனிதன் படத்தின் ஆரம்பத்தில் ஒரு நிமிட காட்சி நீக்கப்பட்டுள்ளது.

மழை பிடிக்காத மனிதன் போஸ்டர் மற்றும் விஜய் மில்டன் புகைப்படம்
மழை பிடிக்காத மனிதன் போஸ்டர் மற்றும் விஜய் மில்டன் புகைப்படம் (Credits - @FvInfiniti, @realsarathkumar X page)

சென்னை: தமிழ் சினிமாவில் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்து கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘மழை பிடிக்காத மனிதன்’.

இந்நிலையில் பத்திரிக்கையாளர்களோடு படம் பார்த்த விஜய் மில்டன் பின்னர், எனக்கு தெரியாமல் படத்தின் ஆரம்பத்தில் ஒரு நிமிட காட்சி சேர்க்கப்ட்டுள்ளதாக புகார் அளித்தார். மேலும் யார் இந்த காட்சிகளை சேர்த்தார்கள் என தெரியவில்லை எனவும், சென்சார் முடிந்ததும் இவ்வாறு ஒரு நிமிட காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த விவகாரம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான இன்ஃபினிட்டி வென்சர்ஸ் நிறுவனம் படத்திலிருந்து அந்த ஒரு நிமிட காட்சியை நீக்கியுள்ளது. இது குறித்து இயக்குநர் விஜய் மில்டன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “மழை பிடிக்காத மனிதன் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. நான் படத்தில் எதிர்பார்த்த காட்சிகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கிறது.

முன்னதாக எனக்கு தெரியாமல் படத்தில் ஒரு நிமிட காட்சி சேர்க்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்தேன். தற்போது அந்த ஒரு நிமிட காட்சி நீக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் முக்கியமாக நடிகர் சரத்குமாருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அவர் எனக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே பேசி இந்த பிரச்சனையை முடித்து வைத்தார்” என கூறியுள்ளார். இதனையடுத்து திரையரங்குகளில் மழை பிடிக்காத மனிதன் படத்தில் ஆரம்பத்தில் ஒரு நிமிட காட்சி நீக்கப்பட்டு திரையிடப்பட்டு வருகிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: 69வது சோபா பிலிம்பேர் விருதுகள்; விருது குவித்த தமிழ் திரைப்படம் எது தெரியுமா? - முழு பட்டியல் - 69th SOBHA Filmfare Awards

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.