ETV Bharat / entertainment

விஜய், அஜித் போன் கால், 'கோட்' படம் பற்றி அஜித் கூறியது என்ன?... வெங்கட் பிரபு கூறிய சுவாரஸ்ய தகவல்கள்! - Venkat Prabhu about GOAT Movie - VENKAT PRABHU ABOUT GOAT MOVIE

Venkat Prabhu about Vijay, Ajith Friendship: கோட் திரைப்பட இயக்குநர் வெங்கட் பிரபு, விஜய், அஜித் நட்பு குறித்தும், கோட் படம் பார்த்து விஜய் தெரிவித்த கருத்து குறித்தும் பேசியுள்ளார்

விஜய், வெங்கட் பிரபு, அஜித் புகைப்படம்
விஜய், வெங்கட் பிரபு, அஜித் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 14, 2024, 2:58 PM IST

சென்னை: ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘கோட்’ (The Greatest of all time). யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, அஜ்மல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அப்படத்தில் இருந்து 'விசில் போடு', 'ஸ்பார்க்' உள்ளிட்ட மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளது. மேலும் கோட் படத்தின் டிரெய்லர் குறித்து இன்று (ஆகஸ்ட் 14) மாலை அப்டேட் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான வாரிசு கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், மாநாடு படத்திற்குப் பிறகு தமிழில் வெங்கட் பிரபு விஜயை வைத்து இயக்குவதால் கோட் படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு, கோட் படம் குறித்து தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் விஜய் குறித்தும், அவருக்கு அஜித்துடன் உள்ள நட்பு குறித்தும் கூறியுள்ளார்.

வெங்கட் பிரபு கூறியது, “நடிகர் அஜித் 'மங்காத்தா' படத்தில் நடிக்கும் போதே அடுத்து விஜய்யை வைத்து படம் இயக்குங்கள், நல்லா இருக்கும் என கூறினார். தற்போது கோட் படம் இயக்கப் போவதாக அஜித்திடம் கூறிய போது, "எத்தனை வருஷமா சொல்றேன், நல்லா பண்ணு" என கூறினார். இதனையடுத்து சமீபத்தில் நடிகர் அஜித் உடல்நலம் சரியில்லாமல் இருந்த போது அவரை பார்க்கப் போவதாக நடிகர் விஜயிடம் சொன்ன போது, "போனதும் போன் போட்டு கொடு" என்றார்.

பின்னர்ம் அஜித்தை பார்த்த போது அவரிடம் விஜய் தொலைபேசியில் பேசினார். இருவரும் சாதாரணமாக, நண்பர்களாக பேசிக் கொண்டனர். மேலும், கோட் படம் தொடங்கும் போது நடிகர் அஜித் என்னிடம், “மங்காத்தா போல் நூறு மடங்கு இருக்கணும்” என்று கூறினார். அஜித்திற்கு உள்ள பெரிய மனசால் தான் அவ்வாறு கூறினார். அவர் கூறியது போல் படம் எடுத்துள்ளேன், இனி மக்கள் தான் எவ்வளவு மடங்கு என கூற வேண்டும்.

மக்கள், நடிகர் விஜய்யை நினைத்து சந்தோஷப்பட என்ன இருக்கோ அத்தனையும் இந்த படத்தில் செய்துள்ளேன். மேலும், விஜய் கோட் படத்தை பார்த்து பாராட்டியதாகவும், அவர் ஒரு படத்தைப் பற்றி இவ்வளவு பாராட்டியது இல்லை எனவும் அவரது குழு தெரிவித்தனர். எனக்கு விருதுகளை விட இதுதான் சந்தோஷம்" என தெரிவித்துள்ளார். கோட் படம் குறித்து வெங்கட் பிரபு பகிர்ந்து கொண்டது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: 'கோப்ரா' படத்திற்கு எதிர்மறை விமர்சனம் ஏன்? - மனம் திறந்த 'டிமாண்டி காலனி 2' பட இயக்குநர்! - Ajay gnanamuthu

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.