பரியேறும் பெருமாள் 'கருப்பி' நாய் விபத்தில் உயிரிழப்பு! - PARIYERUM PERUMAL KARUPPI DOG
இயக்குநர் மாரி செல்வராஜின் முதல் படமான பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நடித்த கருப்பி நாய் தீபாவளியன்று பட்டாசு வெடி சத்தத்திற்கு பயந்து ஓடிய போது வாகனம் மோதி உயிரிழந்தது.


Published : Nov 2, 2024, 12:30 PM IST
தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புளியங்குளம் கிராமத்தை சேர்ந்த மாரி செல்வராஜ், 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். பரியேறும் பெருமாள் திரைப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது.
இந்த படத்தில் பெரும்பாலான காட்சிகள் தனது சொந்த ஊரான புளியங்குளம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் எடுத்திருப்பார். அந்தப் படத்தில் 'கருப்பி' என்ற நாய் முக்கிய கதாபாத்திரத்தில் இடம் பெற்றிருக்கும். அந்த கருப்பி நாயை சுற்றி படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கும்.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயனின் பாக்ஸ் ஆபிஸ் வேட்டை.. ஒரே நாளில் ரூ.50 கோடியை நெருங்கிய வசூல்!
இந்த நிலையில் அந்த படத்தில் நடித்த கருப்பி நாய் நேற்று முன்தினம் தீபாவளி அன்று ஊரில் பட்டாசு வெடித்த போது பயந்து ஓடியுள்ளது. அப்போது சாலையில் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் அந்த வழியாகச் சென்றவர்கள் கருப்பி நாயை மீட்டு வீட்டுக்கு கொண்டு வந்துள்ளனர்.
ஆனால் நாய் பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து உயிரிழந்த கருப்பி நாயின் உரிமையாளரும், பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நடித்த விஜய முத்து மற்றும் ஊரைச் சேர்ந்தவர்கள் கருப்பி நாய்க்கு மாலை அணிவித்து பரம்பு பகுதியில் நல்லடக்கம் செய்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்