சென்னை: தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விஜய் நடிப்பில் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி ’கோட்’ (Greatest of all time) திரைப்படம் வெளியாகவுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகவுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கோட் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில், படத்தின் பாடல்கள் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
மேலும் கோட் படத்தின் டிரெய்லர் நாளை (ஆகஸ்ட் 17) மாலை வெளியாகவுள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். மேலும் தான் தீவிர அரசியலில் ஈடுபட போவதால் தற்போது கமிட் செய்துள்ள படங்களை முடித்துவிட்டு சினிமாவில் நடிப்பதிலிருந்து விலகப் போவதாகவும் கூறினார்.
இதனைத்தொடர்ந்து கோட் படத்திற்கு பிறகு நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு கோலிவுட்டிலும், ரசிகர்கள் மத்தியிலும் நிலவியது. இயக்குநர்கள் அட்லி, ஷங்கர், எச்.வினோத் என பல பெயர்கள் அடிபட்டது. இந்நிலையில் எச்.வினோத் விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது தற்போது உறுதியாகியுள்ளது.
#Thalapathy69 - It'll be a 200% Thalapathy's film & it'll be a commercial one for all sets of audiences..🔥
— Laxmi Kanth (@iammoviebuff007) August 16, 2024
• My films are seen by all age groups & political parties.. So The film won't attack any political party or politician.. It will be a light hearted one with 100%… pic.twitter.com/5bkHaGxzMd
நேற்று எச்.வினோத் இதனை உறுதிபடுத்தியுள்ளார். தளபதி 69 படத்தை தான் இயக்கவிருப்பதாகவும், அப்படம் அனைத்து விதமான ஆடியன்ஸையும் கவரும் கமர்ஷியல் படமாக இருக்கும் எனவும், அரசியல் படமாகவும், எந்த ஒரு அரசியல் கட்சியையும் தாக்கும் வகையில் இருக்காது எனவும் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், விஜய் மேலும் பல படங்களில் நடிக்க வேண்டும் என்பது ரசிகர்கள் விருப்பமாக உள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: விக்ரமின் அசாத்திய நடிப்பில் வரவேற்பை பெறும் தங்கலான்... முதல் நாள் வசூல் எவ்வளவு? - thangalaan collections