ETV Bharat / entertainment

பெண் பத்திரிகையாளரிடம் அத்துமீறலா? சின்மயி பதிவிற்கு ஜான் விஜய் பதில் என்ன? - chinmayi accuses john vijay - CHINMAYI ACCUSES JOHN VIJAY

Chinmayi: பெண் ஒருவர் நடிகர் ஜான் விஜய் மீது பாலியல் புகார் கொடுத்திருக்கும் தகவலை பிரபல பாடகி சின்மயி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜான் விஜய், சின்மயி
ஜான் விஜய், சின்மயி (Credits - celebrities social media pages)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jul 27, 2024, 3:45 PM IST

Updated : Jul 27, 2024, 3:56 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் பிரபலாமன நடிகர்களுள் ஒருவர் ஜான் விஜய். இவர் பல படங்களில் வில்லன் கேரக்டரில் நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற மொழிகளிலும் நடித்திருக்கிறார். இந்நிலையில், தற்போது பெண் ஒருவர் நடிகர் ஜான் விஜய் மீது பாலியல் புகார் கொடுத்திருக்கும் தகவல் தான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பிரபல பாடகி சின்மயி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும், மலையாள பெண் பத்திரிகையாளர் ஒருவர் ஜான் விஜய் நேர்காணலுக்காக காத்திருந்த போது அவர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டி உள்ளார். சின்மயி வெளியிட்டுள்ள பதிவில், "நடிகர் ஜான் விஜய் அடிக்கடி சென்னையில் உள்ள கிளப் மற்றும் பப்களுக்கு வருவார். அங்கு வரும் பெண்களை அவர் தவறான கண்ணோட்டத்துடன் பார்ப்பார். பெண்களை தவறான நோக்கத்துடன் அணுகுவார்.

பெண்கள் மறுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ளாமல், தான் ஒரு செலிபிரிட்டி என்பதால் தனக்கு பெண்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று பெண்களுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டே இருப்பார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவரிடம் பெண்கள் பேச விரும்பவில்லை என்றாலும் கூட தொல்லை கொடுத்துக் கொண்டே இருப்பார். இவரால் பல பெண்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதுதொடர்பாக ஜான் விஜய்யை ஈடிவி பாரத் தொடர்பு கொண்டு கேட்டபோது பதிலளிக்க மறுத்துவிட்டு தொடர்பை துண்டித்து விட்டார். மேலும், சிக்னல் இல்லை எனவும் குறுஞ்செய்தி வாயிலாக தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஒரு வரலாற்று மாணவியாக அதனை நான் செய்திருக்க வேண்டும்.. சாவர்க்கர் சர்ச்சைக்கு சுதா கொங்கரா விளக்கம்! - Sudha kongara

Last Updated : Jul 27, 2024, 3:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.