சென்னை: தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும், கதாநாயகனாகவும் வலம் வருபவர் யோகி பாபு. இவர் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் போட் படத்தில் நடித்துள்ளார். இப்படமானது கடந்த 1943ஆம் ஆண்டு அக்.12-ம் தேதி நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. மாலி & மன்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்பு தேவன் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இதில் எம்.எஸ்.பாஸ்கர், ஷாரா, மதுமிதா, சின்னி ஜெயந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி வெளியாகிறது. சக்தி ஃப்லிம் பேக்டரி ரிலீஸ் செய்கிறது. சமீபத்தில் இப்படத்திலிருந்து இரு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய நிலையில், இன்று (ஜூலை 26) ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.
Drive deep into the spellbinding trailer of @iyogibabu & Director @chimbu_devan's #Boat 🛶https://t.co/FVOXg1mmEZ
— Sakthi Film Factory (@SakthiFilmFctry) July 26, 2024
Get ready for a complete experience of Laughter, thriller, Adventure & visual treat
Produced by @maaliandmaanvi & @cde_off
A @SakthiFilmFctry @sakthivelan_b…
ட்ரெய்லரின் தொடக்கமே போர் ஏற்படப் போவது தொடர்பான கதைக்களத்துடன் மூவ் ஆகிறது. மேலும், இப்படத்தின் காட்சிகள் முழுக்க முழுக்க கட்டுமரத்திலே நடக்கும் காட்சிகளாகும். இதில், ‘மிக மோசமான அரக்கன் மனிதன்’ தான் என்ற டயலாக் இடம்பெற்றுள்ளது.
ஜிப்ரான் பின்னணி இசை ஒவ்வொரு சீனுக்கும் ஏற்றார் போல் அமைந்துள்ளது. மேலும், இந்தியாவின் தற்போதைய நிலைமையை படத்தில் சிம்பு தேவன் எடுத்துக்காட்டி இருக்கலாம் என ரசிகர்கள் இணையத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், இம்சை அரசன் 23ம் புலிகேசி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் போல் போட் படம் இருக்குமா எனவும் இணையத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: விஷால் படங்களுக்கு கட்டுப்பாடு.. கமிட்டாகியுள்ள படங்களை பாதிக்குமா? தயாரிப்பாளர் சங்க நிர்வாகி விளக்கம்! - Vishal new movie Restrictions