ETV Bharat / entertainment

ரீ என்ட்ரி கொடுத்த சாச்சனா, ஆண்கள் அணியால் கண் கலங்கிய ரவீந்தர்... இந்த வாரம் வெளியேறப் போவது யார்?

Bigg Boss season 8 Tamil: பிக்பாஸ் 5வது நாளில் நேற்று nomination free passக்கு சண்டை, சாச்சனா ரீ என்ட்ரி, real, fake ஆட்டம் என பல்வேறு சுவாரஸ்ய நிகழ்வுகள் அரங்கேறியது.

பிக்பாஸ் விஜய் சேதுபதி, சாச்ச்னா, ரவீந்தர்
பிக்பாஸ் விஜய் சேதுபதி, சாச்ச்னா, ரவீந்தர் (Credits - vijay television x page, sachana_official_ Instagram page, ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Oct 12, 2024, 10:23 AM IST

சென்னை: பிக்பாஸ் வீட்டில் நேற்று பல்வேறு சுவாரஸ்ய நிகழ்வுகள் அரங்கேறின. ரஞ்சித், சவுந்தர்யா, முத்து ஆகியோர் இந்த வார எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று 5வது நாளில் nomination free passக்கு ஓட்டெடுப்பு நடைபெற்றது. ஆண்கள் அணியிலும், பெண்கள் அணியிலும் ஒருவருக்கு பாஸ் வழங்க, ஒருமனதாக தேர்ந்தெடுத்து கூற வேண்டும். ஆண்கள் அணியில் அனைவரும் தங்களுக்கு வேண்டும் என பிரச்சார வகையில் பேசிய நிலையில், பெண்கள் அணியில் சண்டை ஏற்பட்டது.

ஒருபக்கம் சவுந்தர்யா தனக்கு பாஸ் வேண்டும் என முண்டியடித்து நிற்க, ஹன்ஷிதா மறுபக்கம் முறைத்து கொண்டு இருந்தார். இதனைத்தொடர்ந்து ஆண்கள் அணியினர் அருண் பிரசாத்தை ஒரு மனதாக nomination free passக்கு தேர்வு செய்ய, பெண்கள் அணியினர் ஒருவரை ஒருவர் முகத்தை பார்த்து கொண்டு உட்கார்ந்திருந்தனர். தர்ஷா குப்தா ’நானும் தான் பாஸை விட்டு கொடுத்தேன் நீயும் விட்டுக் கொடு’ என ஹன்ஷிதாவிடம் சொல்ல, ஹன்ஷிதா பெண்கள் அணியில் குருப்பிஸம் இருக்கு என ஒரு பிரச்சனையை கிளப்பினார்.

‘அட போங்கப்பா’ என பிக்பாஸ் பெண்கள் அணிக்கு பாஸ் கிடையாது என தெரிவித்தார். இந்த சம்பவங்கள் ஒரு பக்கம் அரங்கேற மறுபக்கம், சாச்சனா சர்ப்ரைஸாக வீட்டிற்குள் பூனைபோல ரீ என்ட்ரி கொடுத்தார். அனைவரும் ஆச்சரியத்தில் இருந்த நேரத்தில், பிக்பாஸ் நிகழ்ச்சியை வெளியில் இருந்து பார்த்த போது இருந்த கருத்துக்களை சாச்சனா பகிர்ந்து கொண்டார். ஆண்கள் அணியில் ரஞ்சித், விஷால் ஆகியோரிடம் பெரிதாக கண்டெண்ட் இல்லை என்றார்.

‘சரிம்மா ஆண்கள் பற்றி சொல்லிட்டிங்க, பெண்கள் பற்றி சொல்லுங்க’ என்று ரவீந்தர் சாச்சனாவிடம் கேட்க, அதற்கு அவர், ’நாங்கள் தனியா உள்ள போய் பேசிக்கிறோம்’ என உஷாராக பதில் அளித்தார். பிறகு சாச்சனா பெண்கள் அணிக்கு எடுத்த கிளாஸில் பெண்களை திட்டாத குறை தான். பெண்கள் அணியில் துளி கூட ஒற்றுமை இல்லை, அப்பட்டமாக தெரிகிறது என்றார். இந்த கச்சேரி எல்லாம் முடிந்த நிலையில், யார் real, fake என போட்டியாளர்கள் முகத்தில் ஸ்டிக்கர் ஒட்டும் போட்டியை பிக்பாஸ் வைத்தார்.

இதில் ஆண்கள் அணியில் அருண் பிரசாத், பெண்கள் அணியில் சுனிதா ஆகியோருக்கு அதிகமான real ஸ்டிக்கர் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து ரவீந்தர், ரஞ்சித் ஆகியோருக்கு fake ஸ்டிக்கர் அதிகமாக கிடைத்தது. அதில் ரவீந்தர், நான் பெண்களுக்கு எதிராக போட்டியிட்டும், எனக்கு ஆண்கள் சார்பில் மட்டுமே அதிகமாக 4 fake ஸ்டிக்கர் கிடைத்தது என வருந்தினார்.

இதையும் படிங்க: 'வேட்டையன்' படத்தில் அரசு பள்ளி தொடர்பான காட்சிக்கு எதிர்ப்பு; படத்தை நிறுத்தக் கோரி போராட்டம்!

இதனிடையே விஷால் நீங்கள் வேண்டுமென்றே போலியாக நடிப்பதாக ரஞ்சித்தை குறை கூறினார். இதனால் ரவீந்தர், விஷால் இடையே சண்டை ஏற்பட்டது. ஆண்கள் அணி ஒற்றுமையாக இருந்த நிலையில், விளையாட்டாக ஆடிய பிராங்க் கேம் வினையானதால் சண்டை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.