ETV Bharat / entertainment

புகழ் இல்லாமல் பிக்பாஸ் வந்தது தவறா?... எலிமினேட் செய்யப்பட்ட பின் கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட ரியா! - BIGG BOSS 8 TAMIL

Bigg boss 8 tamil Riya: பிக்பாஸ் சீசன் 8இல் வைல்ட் கார்ட் போட்டியாளராக உள்ளே நுழைந்து கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட ரியா தியாகராஜன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் விஜய் சேதுபதி, ரியா தியாகராஜன்
பிக்பாஸ் விஜய் சேதுபதி, ரியா தியாகராஜன் (Credits - riya_thiyagarajan Instagram Account)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 19, 2024, 7:27 AM IST

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்ட ரியா தியாகராஜன் தான் வெளியேற்றப்பட்டது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 8இல் தொடக்கத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் ஆரம்பம் முதல் ரவீந்தர், அர்னவ், தர்ஷா, சுனிதா ஆகியோர் வெளியேறிய நிலையில் வைல்டு கார்ட் எண்ட்ரியாக 6 பேர் வந்தனர்.

அந்த 6 பேர்களில் நடிகையும், மாடலுமான ரியா தியாகராஜன் நுழைந்தார். அவர்கள் வந்த முதல் வாரம் எலிமினேஷனில் இருந்து தப்பித்த நிலையில், கடந்த வார எலிமினேஷனில் ரியா தியாகராஜன் வெளியேற்றப்பட்டார். எலிமினேட் செய்யப்பட்ட போது நான் எலிமினேட் செய்ய வேண்டிய நபர் கிடையாது என அழுது கொண்டே வெளியேறினார். மேலும் ரியா எலிமினேட் செய்யப்பட்டது பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 8இல் வெளியேற்றப்பட்டது குறித்து ரியா அழுது கொண்டே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியது, “இந்த பதிவு எடுக்கும் போதே நான் கொஞ்சம் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன். ஏனென்றால் எனக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைக்கும் போதே என் நண்பர்கள் PR அணி வைத்துக் கொள் என்றெல்லாம் அட்வைஸ் செய்தனர். ஆனால் நான் அந்த விஷயங்கள் செய்யவில்லை, நான் பிக்பாஸ் வீட்டில் நன்றாக செயல்பட்டால் மக்கள் எனக்கு ஆதரவு அளிப்பார்கள் என நம்பி சென்றேன்.

பிக்பாஸ் வீட்டில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டி அதற்கு எதிராக கேள்வி எழுப்பியுள்ளேன். அனைத்து விஷயங்களும் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் நான் ஏதோ ஒன்று செய்கிறேன் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். அப்படி இருந்தும் மக்கள் எனக்கு ஏன் ஆதரவு அளிக்கவில்லை என்ற கேள்வி எனக்குள் எழுகிறது. அதுமட்டுமின்றி நான் பிரபலம் இல்லை என்ற கேள்வியும் எனக்கு எழுகிறது.

இதையும் மீறி, என்னை போன்ற ஆள் பிக்பாஸ் வரக்கூடாதா, நாங்கள் நன்றாக விளையாடினால் ஆதரவு அளிக்க மாட்டார்களா என பல கேள்விகள் மண்டைக்குள் ஓடுகிறது. இது பற்றி யோசித்து எவ்வாறு இதிலிருந்து மீண்டு வருவேன் எனத் தெரியவில்லை. இதையும் தாண்டி எனக்கு ஆதரவு அளித்த மக்களுக்கு மிகவும் நன்றி. வேறு என்ன சொல்வது என தெரியவில்லை” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: "தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் படமாக தான் கங்குவாவை பார்க்கிறேன்" - நடிகர் சூரி கருத்து!

ரியா எமோஷனலாக பேசியுள்ள இந்த வீடியோ பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் பேசு பொருளாகியுள்ளது. கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து ரியா வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த வாரம் வீட்டின் கேப்டனாக வைல்டு கார்ட் எண்ட்ரியாக உள்ளே நுழைந்த மஞ்சரி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.