ETV Bharat / entertainment

பாடகி உமா ரமணன் மறைவு: கணவர் ஏ.வி.ரமணன் வைத்த வேண்டுகோள்! - Uma Ramanan Passed Away - UMA RAMANAN PASSED AWAY

RIP Uma Ramanan: பின்னணிப் பாடகி உமா ரமணன் காலமான நிலையில், அவரது கணவர் ஏ.வி.ரமணன் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அஞ்சலி நிகழ்வு தொடர்பான செய்தி சேகரிக்க வர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

AV Ramanan requested to media people not come for uma ramanan condolence for privacy

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 2, 2024, 12:54 PM IST

"பத்திரிகையாளர்கள் யாரும் வரவேண்டாம்" - மறைந்த பின்னணி பாடகி உமா ரமணனின் கணவர் வேண்டுகோள்

சென்னை: பின்னணிப் பாடகி உமா ரமணன்(69), உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சென்னை அடையாறு, காந்தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (புதன்கிழமை) இரவு உயிரிழந்தார். தொடர்ந்து, உமா ரமணனின் இறுதிச் சடங்குகள் இன்று (மே 2) மாலை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஏஎஸ் அதிகாரியின் மகளாக உமா ரமணன், தந்து பெற்றோரின் விருப்பத்திற்கான இசை கற்றுக் கொள்ளத் துவங்கினார். அதனைத் தொடர்ந்து, இசையில் மேல் ஏற்பட்ட பிரியத்தால், கல்லூரி காலங்களிலேயே பல்வேறு பரிசுகளைப் பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து, மேசையில் இசைக் கச்சேரி நடத்தி வந்த ஏ.வி.ரமணனின் சந்திப்பு உமா ரமணன் வாழ்க்கையையே மாற்றியது. ஏ.வி.ரமணன் மற்றும் உமா ரமணன் இருவரும் இணைந்து ஆயிரக்கணக்கான மேடை கச்சேரிகளைச் செய்துள்ளனர்.

அதையடுத்து, இசையமைப்பாளரும், 70-களில் பின்னணி பாடகரும் ஏ.வி.ரமணனை பின்னணி பாடகியான உமா ரமணன் திருமணம் செய்து கொண்டார். தற்போது, இவர்களுக்கு விக்னேஷ் ரமணன் என்கிற மகன் ஒருவர் உள்ளார். முதன்முதலாக ஏ.வி.ரமணன், உமா ரமணன் இருவரும் இணைந்து ‘பிளே பாய்’ என்ற இந்தி திரைப்படத்தில் பாடினர். தொடர்ந்து இருவரும் பல்வேறு பாடல்களை பாடி வந்த நிலையில், இசைஞானி இளையராஜா இசையில் 1980ஆம் ஆண்டு வெளிவந்த 'நிழல்கள்' படத்தில் இடம் பெற்ற "பூங்கதவே தாழ் திறவாய்" என்ற பாடல் மூலம் உமா ரமணன் பிரபலமானார்.

அதனைத் தொடர்ந்து, பன்னீர் புஷ்பங்கள், கோயில் புறா, பகவதி புரம் ரயில்வே கேட், பாலநாகம்மா, நண்டு, தூறல் நின்னு போச்சு, மெல்ல பேசுங்கள் கைதியின் டைரி, புதுமைப் பெண், புது வசந்தம், அரங்கேற்ற வேளை போன்ற பல படங்களில் மனதைக் கவரும் பல பாடல்களை பாடி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையே தனது இசையால் கட்டி வைத்திருந்தார் என்றால் மிகையாகாது. மேலும், நிழல்கள், வைதேகி காத்திருந்தாள், திருப்பாச்சி என நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் பாடல்களைப் பாடியுள்ளார்.

எம்எஸ்வி, இளையராஜா, வித்யாசாகர் உள்ளிட்ட இசை அமைப்பாளர்கள் இசையில் பல வெற்றிப் பாடல்கள் பாடியுள்ள உமா ரமணன், இளையராஜா இசையில் மட்டும் 100க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி அசத்தியுள்ளார்.

உமா ரமணன் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் தனது வீட்டில் கீழே விழுந்ததையடுத்து, உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். அதையடுத்து நேற்று இரவு 7 மணிக்கு காலமானதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அவரது உடல் சென்னை, அடையார் காந்திநகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று இறுதிச்சடங்கு முடிந்தபின், மாலை பெசன்ட்நகர் மின் மயானத்தில் உடல் தகனம் நடைபெறும் என குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பத்திரிகையாளர்கள் யாரும் வர வேண்டாம் என மறைந்த பின்னணி பாடகி உமாவின் கணவர் ரமணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "எனது மனைவி உமா ரமணன் இறைவனடி சென்றார்கள். மே மாதம் 1ஆம் தேதி பிறந்து மாலை இப்படி நடக்கும் என குடும்பத்தில் யாரும் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக பத்திரிக்கையாளர்கள், ஊடகம் நண்பர்கள் வருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பிரைவசி காரணமாக இது உமா ரமணனின் விருப்பம். அவரை நான் அடிக்கடி குரு என்று சொல்லுவேன். அந்த வகையில், உமா ரமணன் இறைவன் அடியில் இளைப்பாற வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ் திரையுலகின் பின்னணிப் பாடகி உமா ரமணன் காலமானார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.