ETV Bharat / entertainment

ஏஆர் ரஹ்மான், பிரபுதேவா நட்சத்திர கூட்டணியில் உருவாகும் படத்தின் தலைப்பு வெளியீடு! - AR Rahman prabhu deva movie title - AR RAHMAN PRABHU DEVA MOVIE TITLE

AR Rahman prabhu deva movie title: ஏஆர் ரஹ்மான் இசையில், பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கு 'மூன் வாக்' என பெயரிடப்பட்டுள்ளது.

மூன் வாக் டைட்டில் போஸ்டர்
மூன் வாக் டைட்டில் போஸ்டர் (Photo Credits - A R Rahman X Page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 19, 2024, 3:33 PM IST

சென்னை: இந்தியத் திரையுலகில் ஏஆர் ரஹ்மான், பிரபுதேவா ஆகியோர் பல சாதனைளை நிகழ்த்தியுள்ளனர். மேலும் காதலன், மின்சார கனவு, லவ் பேர்ட்ஸ் என பல படங்களில் இருவரும் இணைந்து பணிபுரிந்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளனர்.

தற்போது 25 ஆண்டுகளுக்கு பிறகு ஏஆர் ரஹ்மான், பிரபுதேவா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இயக்குநர் மனோஜ் NS இயக்கும் படத்திற்கு #ARRPD6 என்ற ஆரம்பத்தில் தற்காலிகமாக தலைப்பிடப்பட்டு படப்படிப்பு தொடங்கியது. இந்நிலையில் தற்போது இப்படத்திற்கு 'மூன் வாக்' (Moon walk) என பெயரிடப்பட்டுள்ளது.

மூன் வாக் திரைப்பட போஸ்டர்
மூன் வாக் திரைப்பட போஸ்டர் (Credits - A R Rahman X Page)

ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகும் இப்படத்தில், நடிகர்கள் பிரபு தேவா, யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், சாட்ஸ், நிஷ்மா மற்றும் சுஷ்மிதா ஆகியோருடன் மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கிறார்கள். இப்படத்தின் இசை ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களுடன், நகைச்சுவை கலந்த குடும்பங்கள் கொண்டாடும் வகையில் இப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை அடுத்த ஆண்டு பான் இந்திய படமாகத் திரைக்குக் கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இப்படத்தை மனோஜ் NS, திவ்யா மனோஜ் மற்றும் பிரவீன் இலக் ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர். அனூப் VS ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா படத்தொகுப்பு செய்து வருகிறார்.

இதையும் படிங்க: திருப்பதி கோயிலில் நடிகர் அஜித் சுவாமி தரிசனம்! திடீர் தரிசனத்திற்கு இதுதான் காரணமா? - Actor Ajith Kumar at tirupathy

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.