ETV Bharat / entertainment

"ஹாப்பி அனிவர்சரி க்யூட்டி" மனைவி சிநேகா ரெட்டிக்காக அல்லு அர்ஜூன் இன்ஸ்டாவில் வாழ்த்து! - Allu Arjun Wedding Anniversary

Allu Arjun Sneha Reddy Wedding Anniversary: நடிகர் அல்லு அர்ஜூன் தனது 13வது திருமண நாளையொட்டி, மனைவி சிநேகா ரெட்டிக்கு தனது வாழ்த்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 6, 2024, 3:39 PM IST

ஹைதராபாத்: நடிகர் அல்லு அர்ஜூன் - அல்லு சினேகா ரெட்டி ஆகியோர் 13வது ஆண்டு திருமண நாள் விழாவை இன்று (மார்ச் 6) கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவர்களுக்கு திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தனது அன்பை வெளிப்படுத்தும் விதமாக, 2023-ல் அல்லு அர்ஜூன், 69வது தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் தனது மனைவியுடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக பதிவிட்டுள்ளார். அதில், "ஹாப்பி அனிவர்சரி க்யூட்டி" எனவும் குறிப்பிட்டுள்ளார். இவர்களது திருமணம் 2011ஆம் ஆண்டு நடைபெற்றது.

allu arjun wishes his wife sneha reddy
allu arjun wishes his wife sneha reddy

அதில், "ஹாப்பி அனிவர்சரி க்யூட்டி. 13 ஆண்டுகளை கடந்து விட்டோம். உனது துணையோடு, நான் செழித்து வளர்ந்தேன். உந்தன் அமைதியிலிருந்து ஆற்றலைப் பெறுகிறேன். காலத்தின் இறுதி வரை இன்னும் பல" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தனது நண்பர்களின் மூலம் சிநேகாவை முதல்முறையாக கண்ட அல்லு அர்ஜூன், அவரைப் பார்த்தவுடன் 'லவ் அட் ஃப்ர்ஸ்ட் சைட்' (Love at First Sight) எனக் கண்டதும் காதலில் விழுந்தார். இந்நிலையில், அவரை திருமணமும் செய்து கொண்ட நிலையில், அல்லு அர்ஜூன் - சிநேகா தம்பதியினருக்கு அர்ஹா என்ற மகளும், அயன் என்ற மகனும் உள்ளனர்.

தெலுங்கு சினிமாவில் மட்டும் பிரபலமாக இருந்த அல்லு அர்ஜூனுக்கு, 'புஷ்பா' திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் சூப்பர் டூப்பர் ஹிட்டைக் கொடுத்தது. இதற்கு அடுத்தக்கட்டமாக, இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்த 'புஷ்பா - 2; தி ரூல்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

இப்படம் 2024, ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளனர். விஜய் சேதுபதி, ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்தின் ரிலீஸ் நாளுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: சிறந்த நடிகர் மாதவன், சிறந்த நடிகை ஜோதிகா.. 2015க்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.