ஹைதராபாத்: நடிகர் அல்லு அர்ஜுன், நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் வெளியான 'புஷ்பா 2' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இப்படம் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியானது. இதற்கு முன்னதாக புஷ்பா 2 சிறப்புக் காட்சி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கத்தில் டிசம்பர் 4ஆம் தேதி இரவு திரையிடப்பட்டது.
அப்போது ரசிகர்களுடன் படம் பார்க்க அல்லு அர்ஜூன் திரையரங்கிற்கு வந்தார். இந்நிலையில் திரையரங்கில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அந்த கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி (35) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் ஸ்ரீதேஜா (9) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.
BREAKING: Allu Arjun's father CONFIRMS ₹2⃣ cr donation for the boy's future💸💰 pic.twitter.com/I8xsYbZuJk
— Manobala Vijayabalan (@ManobalaV) December 25, 2024
இதனைத்தொடர்ந்து பெண் உயிரிழந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் சந்தியா திரையரங்க உரிமையாளர்கள், நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். பின்னர் அல்லு அர்ஜூனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து பெண் உயிரிழந்த வழக்கில் நீதி கேட்டு, அடையாளம் தெரியாத நபர்கள் 6 பேர், அல்லு அர்ஜூன் வீட்டின் மீது தாக்குதல் நடத்தினர். அவரது வீட்டின் மீது கல் எறிந்து, அல்லு அர்ஜூனுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனைத்தொடர்ந்து 6 நபர்களை போலீசார் கைது செய்த நிலையில் பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
BREAKING: ₹2️⃣ cr handed over to Pushpa 2 stampede victim family.
— Manobala Vijayabalan (@ManobalaV) December 25, 2024
Allu Arjun - ₹1️⃣ cr
Mythri - ₹5️⃣0️⃣ lacs
Sukumar - ₹5️⃣0️⃣ lacs
இந்த நிலையில், இவ்வழக்கு குறித்து அல்லு அர்ஜூனிடம் போலீசார் நேற்று 3 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர். அப்போது 20 கேள்விகளுக்கு மேல் அல்லு அர்ஜூனிடம் போலீசார் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அல்லு அர்ஜூனின் தந்தையும், தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த், ஹைதராபாத் KIMS மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள சிறுவன் ஸ்ரீதேஜை நேரில் சந்தித்து அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இதையும் படிங்க: ”என் வாழ்க்கை இனி அர்த்தமில்லை”... மனமுடைந்த த்ரிஷா! - TRISHA SON ZORRO PASSED AWAY
மேலும், 'புஷ்பா 2' படக்குழு சார்பாக சிறுவனின் குடும்பத்தாருக்கு 2 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இதில் அல்லு அர்ஜூன் 1 கோடியும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் 50 லட்சமும், சுகுமார் 50 லட்சமும் சேர்த்து தெலங்கானா திரைப்பட சங்கம் தலைவர் தில் ராஜுனிடம் வழங்கப்பட்டது.