சென்னை: நடிகை சிம்ரன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர். விஜய், அஜித், கமல், சூர்யா, விக்ரம் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்தவர். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான 'அந்தகன்' திரைப்படத்தில் இவர் நடித்த எதிர்மறை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், இவர் நடிகர் விஜயை வைத்து படம் தயாரிக்க கேட்டதாகவும், அதற்கு அவர் மறுத்துவிட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் கருத்து பரவி வந்ததை அடுத்து, இதுகுறித்து சிம்ரன் விளக்கம் அளித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "உணர்வு ரீதியாகவும், மன ரீதியாகவும் ஒருவரைப் பாதிக்கும் படியாக சிலர் எப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்பதை பார்க்கையில் மனவருத்தமாக இருக்கிறது. என் திரையுலக வாழ்வில் இதுவரை நான் எந்த வதந்திகளுக்கும் பதிலளித்தது கிடையாது. இப்படியான விஷயங்களைக் கடந்து சென்றுவிடுவேன். ஆனால், இப்போது என்னைப் பற்றி பரவி வரும் வதந்திகளுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
It's truly disheartening to see how people can emotionally manipulate you and how little your friends seem to care about it. Up until now, I’ve stayed quiet, but let me make it clear: I’m not desperate to line up and work with any big heroes. I've been there and done that. My…
— Simran (@SimranbaggaOffc) September 21, 2024
இதையும் படிங்க: விஜய் சேதுபதியின் 'மகாராஜா' திரைப்படம் 100வது நாள் கொண்டாட்டம்!
இதுவரை நான் எந்த பெரிய கதாநாயகர்களுடன் இணைந்து பணியாற்ற ஆசைப்பட்டதில்லை. வாய்ப்புகள் வந்தபோது நடித்திருக்கிறேன், அவ்வளவுதான். இப்போது என் இலக்குகள், என் வாழ்க்கை எல்லாம் முற்றிலும் மாறிவிட்டன.
சமூக வலைத்தளங்களில் என் பெயரை, வேறு ஒருவருடன் இணைத்து பேசுவதைப் பல ஆண்டுகள் சகித்துக் கொண்டு அமைதியாக இருந்தேன். ஆனால், சுயமரியாதை என்பது எல்லாவற்றையும் விட மிகவும் முக்கியம். 'Stop' என்பது பவர்ஃபுல்லான வார்த்தை. அதை இப்போது பயன்படுத்துவது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவதை இத்தோடு நிறுத்திவிடுங்கள் என்பதை அழுத்தமாகக் கூறிக்கொள்கிறேன்.
இங்கு யாரும் நமக்கு ஆதரவாக நிற்கப் போவதில்லை. நாம் தான் நமக்காக குரல் கொடுத்தாக வேண்டும். எனக்காக நான்தான் பேசியாக வேண்டும். நம் சினிமாத் துறையில் நேர்மை இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். என்னைப் பற்றி பொய்யான வதந்திகளைப் பரப்புபவர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்டாக வேண்டும்" என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.