சென்னை: பிக்பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி நேற்று (அக்.06) தொடங்கியது. இந்த சீசனை நடிகர் கமல்ஹாசனுக்கு பதில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ரவீந்திரன், சாச்சனா, தர்ஷா குப்தா, தீபக், அன்ஷிதா, ஆர்னவ், முத்துக்குமரன் உள்ளிட்ட 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
விஜய் சேதுபதி முதல் நாள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விதத்தை நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் பாராட்டி வருகின்றனர். மேலும் போட்டியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் விஜய் சேதுபதி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 24 மணி நேரத்தில் முதல் எலிமினேஷன் என தெரிவித்தார்.
இன்று முதல் எலிமினேஷன் மகாராஜா பட நடிகை சாச்சனா வெளியேற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இது ஒரு புறம் இருக்க, இந்தி பிக்பாஸ் ஹிந்தி சீசன் 18 நேற்று தொடங்கியுள்ளது. கடந்த 17 சீசனாக பிக்பாஸ் சீசனை தொகுத்து வழங்கி வந்த நடிகர் சல்மான் கான் இம்முறையும் 18வது சீசனாக தொகுத்து வழங்குகிறார். இதில் தமிழ் நடிகையும், குக் வித் கோமாளி நிகழ்ச்சி போட்டியாளருமான ஸ்ருதிகா போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.
இதையும் படிங்க: "நான் பார்த்த ரஞ்சித் முகம் வேற”... பிக்பாஸ் முதல் நாளிலேயே அதிரடி காட்டிய விஜய் சேதிபதி! - Bigg boss season 8 vijay sethupathi
முன்னதாக சூர்யாவுடன் ’ஸ்ரீ’ என்ற படத்தில் நடித்த ஸ்ருதிகா, பின்னர் பல ஆண்டு இடைவேளிக்கு பிறகு விஜய் டிவியில் நடைபெறும் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிலையில் இந்தி பிக்பாஸில் கலந்து கொண்ட முதல் தமிழ் பெண் ஸ்ருதிகா ஆவார். இதற்கு முன்னதாக நடன இயக்குநர் பாபா பாஸ்கர், கிரண், பிந்து மாதவி ஆகியோர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கும் தெலுங்கு பிக்பாஸில் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்