சென்னை: பிக்பாஸ் சீசன் 8 தமிழ் நேற்று (அக்.06) பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கியது புதிய தொகுப்பாளர் விஜய் சேதுபதி, புதிய வீடு, ஆட்டம் புதுசு என முதல் நாளிலேயே பரபரப்புடன் இந்த சீசன் தொடங்கியுள்ளது. இந்த முறை தயாரிப்பாளர் ரவீந்திரன், மகாராஜாவில் விஜய் சேதுபதி மகளாக நடித்த சாச்சனா, நடிகை தர்ஷா குப்தா, சத்யா குமார், தீபக், ஆர்ஜே ஆனந்தி உள்ளிட்ட 18 பேர் களமிறங்கியுள்ளனர்.
ஆரம்ப முதல் நாளிலேயே பல சர்ச்சைகளை பிக்பாஸ் தொடங்கி வைத்தார். ஆண்கள், பெண்கள் என தனியாக பிரிக்கப்படுவதாக பிக்பாஸ் தெரிவித்தார். அதனால் முதலில் படுக்கைகளுக்கு பிரச்சனை ஏற்பட்டது. இந்த பிரச்சனையில் ஆண்கள், பெண்களுக்கு ஒரு கண்டிஷனை தெரிவித்தனர். அதாவது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஆண்களை ஏதாவது ஒரு வாரத்தில் வெளியேற்றுவதற்கு நாமினேட் செய்யக் கூடாது, அது எந்த வாரம் என்பதை தாங்கள் தான் முடிவு செய்வோம் என தெரிவித்தனர்.
இந்த கண்டிஷன்களை பிக்பாஸ் வீட்டிற்கு ஆரம்பத்தில் சென்ற பெண்கள் ஏற்றுக் கொள்ள பின்னர் சென்ற ஜாக்குலின் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இன்று பிக்பாஸ் முதல் நாளில் யாரை வீட்டை விட்டு வெளியேற்றுவது என்ற பெரும் போட்டி நிலவியது. அந்த போட்டியில் சாச்சனா, வெளியேற வேண்டிய சூழ்நிலை வந்தால் நான் ரெடி என கூறினார்.
இதையும் படிங்க: "நான் பார்த்த ரஞ்சித் முகம் வேற”... பிக்பாஸ் முதல் நாளிலேயே அதிரடி காட்டிய விஜய் சேதிபதி! - Bigg boss season 8 vijay sethupathi
பின்னர் நாமினேஷனுக்கான ஒட்டெடுப்பு நடந்த போது பலர் சாச்சனா பெயரை கூறியுள்ளனர். இதனையடுத்து சாச்சனா வெளியேறும் ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. மேலும் சாச்சனாவிற்கு விஜய் சேதுபதி வழங்கிய பிக்பாஸ் மாதிரி கோப்பையை உடைக்குமாறு பிக்பாஸ் கூறினார். பின்னர் பிக்பாஸ் மாதிரி கோப்பையை சாச்சனா உடைப்பது போன்றும் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்