ETV Bharat / entertainment

சமூக சேவையில் கலக்கும் கேடி பில்லா கில்லாடி ரங்கா நடிகை பாப்பா! - Regina Cassandrra Social Work - REGINA CASSANDRRA SOCIAL WORK

Actress Regina Cassandrra: நடிகை ரெஜினா கசாண்ட்ரா, SUP மெரினா கிளப்பைச் சேர்ந்த குழுவினரோடு துடுப்பு ஏறுதல் மேற்கொள்ளும் போது, கடற்கரை மற்றும் நீர்நிலைகளை குப்பைக் கிடங்காக மாற்றிவிடக் கூடாது என்பதில் எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.

SUP மெரினா கிளப்புடன் நடிகை ரெஜினா கசாண்ட்ரா புகைப்படம்
SUP மெரினா கிளப்புடன் நடிகை ரெஜினா கசாண்ட்ரா புகைப்படம் (credit to Etv Bharat tamil nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 4, 2024, 6:51 PM IST

Updated : May 4, 2024, 10:37 PM IST

சென்னை: நடிகை ரெஜினா கசாண்ட்ரா தமிழ் சினிமாவில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், கான்சூரிங் கண்ணப்பன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், ஃபார்சி திரைப்படத்தில் ரேகாவாகவும், ராக்கெட் பாய்ஸ் திரைப்படத்தில் மிர்னாலினி சாராபாய் பாத்திரத்திலும் நடித்துள்ளார். ரெஜினா கசாண்ட்ரா சினிமா மட்டுமின்றி, சமூகப் பணிகளிலும் தொடர்ந்து ஆர்வம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில், கடற்கரையைச் சுத்தம் செய்யும் தூய்மைப் பணியில் ரெஜினா சில நாட்களுக்கு முன்பு ஈடுபட்டார். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிளாஸ்டிக் தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி உள்ளார். இதற்காக அவர் SUP மெரினா கிளப்பைச் சேர்ந்த குழுவினரோடு துடுப்பு ஏறுதல் மேற்கொண்டிருந்தார்.

அப்போது தனது சமூகப் பணி தொடர்பான அனுபவம் குறித்து பேசிய நடிகை ரெஜினா, “எனக்கு மிகவும் பிடித்த விஷயம் துடுப்பு ஏறுதல். தற்போது அதைச் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதற்காக SUP மெரினா கிளப்பைச் சேர்ந்த குழுவினரோடு இணைந்து கொண்டேன்.

அவர்களின் இந்த சமூக முன்னெடுப்பு எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது. இந்தப் பணியில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள முக்கிய காரணமாக இருந்தது 12 வயதான சிறுவன் அனிஷ் தான். இந்தக் குழுவை வழிநடத்தும் அனிஷ், என்னை இதில் கலந்து கொள்ள ஊக்கமளித்தார்.

மேலும், கடற்கரை மற்றும் நீர்நிலைகளை குப்பைக் கிடங்காக மாற்றிவிடக் கூடாது என்பதில் எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. சுற்றுச்சூழலிலிருந்து பிளாஸ்டிக் மற்றும் இதர கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும். நீர் நிலைகள் நமக்கு அத்தியாவசியமானவை, அதை கலங்கடிக்க வேண்டாம். இந்தப் பணி மிகவும் தேவையான ஒன்று என நினைத்தேன்.

இந்தக் குழுவினரோடு இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது. திரைத்துறையில் ரெஜினா தற்போது அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்திலும், நவாசுதீன் சித்திக் நடிப்பில் உருவாகி வரும் செக்ஷன் 108 படத்திலும் நடித்துள்ளார்" என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மொழி பெரிதா? இசை பெரிதா? - பாடலாசிரியர் சினேகன் சொல்வதென்ன? - Snehan About Ilayaraja Issue

Last Updated : May 4, 2024, 10:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.