ETV Bharat / entertainment

நாயகிக்கு தான் முக்கியத்துவம்; தனித்துவமான கேரக்டரில் கலக்கப்போகும் நித்யா மேனன்! - nithya menen new movie

Nithya Menen: நடிகை நித்யா மேனன் வினய் ராய், நவ்தீப் உள்ளிட்ட பலருடன் ரொமான்ஸ், காமெடி கலந்த ஃபேண்டஸி படத்தில் நடிக்கவுள்ளார்.

காதலில் தோல்வி அடைந்த பெண்ணாக புதிய பரிமாணத்தில் நடிக்கும் நித்யா மேனன்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 15, 2024, 9:12 PM IST

சென்னை: தென்னிந்திய திரையுலகில் ஓகே கண்மணி, மெர்சல், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நித்யா மேனன். தமிழில் இவர் நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் தனுஷுடன் நடித்த திருச்சிற்றம்பலம் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது தனுஷுடன் ராயன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நித்யா மேனன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. பாஸ்க் டைம் தியேட்டர்ஸ் மற்றும் பாப்டர் மீடியா நிறுவனங்கள் தயாரிக்கும் புதிய படத்தில் நித்யா மேனன் நடிக்கிறார். இந்த படம் ரொமான்ஸ், காமெடி கலந்த ஃபேண்டஸி கதையில் உருவாகிறது. தமிழ் சினிமா, அதிகமாக காதலில் தோல்வி அடைந்த பல ஆண் கதாபாத்திரங்களை உருவாக்கியுள்ளது. இந்த படத்தில் காதலில் தோல்வி அடைந்த பெண்ணாக நித்யா மேனன் நடிக்கிறார்.

இந்த படத்தில் கதையின் கதாநாயகர்களாக வினய் ராய், நவ்தீப் (அறிந்தும் அறியாமலும்), பிரதீக் பாப்பர் (FOUR MORE SHOTS PLEASE), தீபக் பரம்போல் ( மஞ்சும்மல் பாய்ஸ்) என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளனர். இயக்குநர் விஷ்ணுவர்தனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய காமினி இந்த படத்தை எழுதி இயக்குகிறார். ஒளிப்பதிவு பணிகளை ப்ரீத்தா ஜெயராமன் மேற்கொள்கிறார். அதேபோல், கலை இயக்குநராக சண்முகராஜா பணியாற்றவுள்ளார்.

இதையும் படிங்க: பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.