ETV Bharat / entertainment

நடிகர் விவேக் மகளுக்கு திருமணம்.. தந்தை வழியை பின்பற்றி நெகிழ்ச்சி! - actor vivek daughter marriage - ACTOR VIVEK DAUGHTER MARRIAGE

Actor Vivek daughter marriage: மறைந்த நடிகர் விவேக்கின் மகள் தேஜஸ்வினிக்கு, பரத் என்பவருடன் நேற்று சின்ன கலைவாணர் சாலையில் அமைந்துள்ள விவேக்கின் இல்லத்தில் திருமணம் நடைபெற்றது.

actor vivek daughter marriage
actor vivek daughter marriage
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 28, 2024, 4:55 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் தனது சமூக சீர்திருத்த நகைச்சுவைகள் மூலம் அனைவரையும் சிந்திக்க வைத்தவர் நடிகர் விவேக். காமெடி மூலம் மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும் புரட்சிகர கருத்துக்களை பேசியவர். அதுமட்டுமின்றி, அப்துல் கலாமின் சீடராக இருந்து ஏராளமான மரக்கன்றுகள் நட்டவர்.

நடிகர் விவேக், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு காலமானார். இவரது இழப்பு திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏராளமான படங்களில் சமூக கருத்துக்களை பேசிய விவேக் மறைந்தது, அவரது ரசிகர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. விவேக் மறைவின் போது, அவர் இருந்த வீதி முழுவதும் மக்கள் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர். இது காண்போரை கலங்க வைத்தது.

கடைசியாக லெஜன்ட் சரவணன் நடித்திருந்த 'லெஜன்ட்' படத்தில் விவேக் நடித்திருந்தார். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்திலும் நடிகர் விவேக் நடித்துள்ளார். விவேக் மறைவை ஒட்டி, இவரது நினைவாக தமிழ்நாடடு அரசு சென்னையில் இவர் குடியிருந்த வீட்டிற்கு அருகே உள்ள சாலைக்கு சின்னக் கலைவாணர் சாலை என பெயர் வைத்தது.

இந்த நிலையில், விவேக்கின் மகள் தேஜஸ்வினிக்கும், பரத் என்கிறவருக்கும் நேற்று சென்னை விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் உள்ள சின்ன கலைவாணர் சாலையில் அமைந்துள்ள விவேக்கின் இல்லத்தில் திருமணம் நடைபெற்றது. மிகவும் எளிமையான நடைபெற்ற இந்த திருமண விழாவில், திரையுலகினர் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மேலும், மணமக்களை வாழ்த்த வந்த அனைவருக்கும் மரக்கன்றுகள், மூலிகை பூச் செடிகள் கொடுக்கப்பட்டது. கிரீன் கலாம் என்ற திட்டத்தின் மூலம் ஒரு கோடி மரக்கன்று நடுவதை கனவாக வைத்திருந்த விவேக்கின் வழியில், அவரது மகளின் திருமணத்திற்கு வந்தவர்களுக்கும் மரக்கன்றுகள் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது, இவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள கள்வன் படத்தில் 'களவாணி பசங்க' என்ற பாடல் வெளியீடு! - Kalvan Movie Songs

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.