ETV Bharat / entertainment

எனக்கு ரசிகர்கள் குறைவா? தங்கலான் படம் ரிலீசாகும் போது பாருங்கள்.. செய்தியாளருக்கு சவால் விடுத்த விக்ரம்! - Actor vikram - ACTOR VIKRAM

தங்கலான் விளம்பர நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம், எனது ரசிகர் பட்டாளத்தை படம் ரிலீசாகும் போது தியேட்டரில் வந்து பாருங்கள், அனைத்து நடிகர்களின் ரசிகர்களுமே எனது ரசிகர்கள் தான் என கூறியுள்ளார்.

தங்கலான்படக்குழு செய்தியாளர் சந்திப்பு
தங்கலான் படக்குழு செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 12, 2024, 11:21 AM IST

மதுரை: பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்றது. இதில் நடிகை மாளவிகா மோகனன் செய்தியாளர்களிடம் பேசிய போது, ”மதுரை எனக்கு ரொம்ப பிடிக்கும், கறி தோசை, ஜிகர்தண்டா என இங்குள்ள உணவு பிடிக்கும் இந்தியாவிலயே மதுரையில் தான் உணவு சிறப்பாக உள்ளது.

தங்கலான் படக்குழு செய்தியாளர் சந்திப்பு வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

மேலும் தங்கலான் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம் மற்றும் முடிவு இரண்டுமே இங்கு தான் நடந்தது, எனது சிறப்பான இடமாக மதுரை அமைந்துள்ளது. விரைவில் நான் தமிழில் சரளமாக பேசுவேன்” என்றார். இதனைத்தொடர்ந்து தங்கலான் படம் குறித்து பேசிய போது, “பலமுறை சொல்வேன் விக்ரம் சிறந்த நடிகர், தங்கலான் படத்தில் சிறப்பாக சண்டை போடுவார், ஆனால் ஆப் ஸ்கிரினில் நல்ல நண்பர்” எனக் கூறினார்.

அதேபோல் இந்த படத்தில் நடித்த ஆங்கில நடிகர் டேனி புதிய இடம், புதிய கலாச்சாரத்தோடு சேர்ந்துவிட்டார். இவர் அதிகளவு இந்திய படங்களில் நடிக்க வேண்டும். இந்த படத்திற்காக பா.ரஞ்சித் சாருக்கு மிக்க நன்றி” எனக் கூறினார்.

இதனைத்தொடர்ந்து நடிகர் விக்ரம் செய்தியாளர்களிடம் பேசியபோது, “மதுரை எனக்கு ஸ்பெஷலான இடம், அனைத்து விடுமுறையிலும் இங்கு தான் இருப்பேன், 10 ஆண்டுகள், மதுரை என்றாலே மக்கள், விடுமுறை, கோயில் பாட்டு, அழகர்கோவில் பாட்டு, கழுதைகள் என அனைத்தும் நினைவுக்கு வரும். மதுரை சாப்பாடு எப்போதுமே ஸ்பெஷலான ஒன்று” என்றார்.

தங்கலான் படத்தின் நடிகைகள் மாளவிகா மோகனன், பார்வதி குறித்து பேசுகையில், “மாளவிகா யார் என்பதை இந்த படம் மூலம் தெரிய வரும். ஆக்ஷன் சீன் முழுவதும் மாளவிகா என்னோடு சிறப்பாக நடித்தார். இதேபோன்று பார்வதியும் இந்த படத்தில் எனது மனைவியாக ரொம்ப ஆர்வமாக பணிபுரிந்தார்” எனக் கூறினார்.

இதனைத்தொடர்ந்து படக்குழுவினர் பற்றி பேசிய நடிகர் விக்ரம், “பா.ரஞ்சித் எனக்கு பிடித்த இயக்குநர் அவரோடு பணிபுரிந்தது மகிழ்ச்சி. எனக்கு பிடித்த இயக்குநர் தங்கலான் படத்தில் உலக சினிமா தரமும், நமது மண்வாசனையும் இருக்கும். இந்த படத்தை தயாரிக்க ஞானவேல் தைரியத்தோடு வந்தார். தங்கலான் அனைவருக்குமான படமாக இருக்கும், காந்தாரா, கேஜிஎஃப் என மற்ற மொழிகளில் தற்போது சிறப்பான படங்கள் வந்துள்ளது. இதேபோன்று இந்த படம் தேசிய அளவிலான படமாக இருக்கும், தங்கலான் படம் நம்ம வரலாறு என நீங்கள் பெருமைபடுவீர்கள்” என்றார்.

இதனையடுத்து விஜய், அஜித், சூர்யா அளவிற்கு உங்களுக்கு ஏன் ரசிகர்கள் பட்டாளம் இல்லையே என கேள்வி எழுப்பினார். அதற்கு விக்ரம், ”எனது ரசிகர் பட்டாளத்தை படம் ரிலீசாகும் போது தியேட்டரில் வந்து பாருங்கள், அனைத்து நடிகர்களின் ரசிகர்களுமே எனது ரசிகர்கள் தான். நான் தூள், சாமி போன்ற கமர்ஷியல் படங்களில் நடித்தவன், ஆனால் வித்தியாசமாக நடிக்க வேண்டும் என்பதற்காக தான் ராவணன் போன்ற பல படங்களில் நடித்தேன். இன்று வரை ராவணன் தான் எங்களுடைய குடும்பத்தின் சிறந்த படம்” என கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: "வரும் காலத்தில் அரசியலுக்கு வரலாம்.. வராமலும் இருக்கலாம்" - கீர்த்தி சுரேஷ் சூசகம்! - Keerthy Suresh on political entry

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.