ETV Bharat / entertainment

ஓடிடியில் கவனம் பெறும் ’போகுமிடம் வெகு தூரமில்லை’... படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய விஜய் சேதுபதி! - POGUMIDAM VEGU THOORAMILLAI

Vijay sethupathi praised pogumidam vegu thooramillai: ’போகுமிடம் வெகு தூரமில்லை’ படம் ஓடிடியில் அதிக பார்வையாளர்கள் மத்தியில் கவனம் பெற்று வரும் நிலையில், நடிகர் விஜய் சேதுபதி படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

போகுமிடம் வெகு தூரமில்லை படக்குழுவினரை  பாராட்டிய விஜய் சேதுபதி
போகுமிடம் வெகு தூரமில்லை படக்குழுவினரை பாராட்டிய விஜய் சேதுபதி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Oct 24, 2024, 1:25 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் புதுமுக இயக்குநர்களின் படங்கள் சமீப காலமாக மக்களின் பாராட்டுக்களை குவித்து வருகிறது. அந்த வகையில் மைக்கேல் கே ராஜன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ’போகுமிடம் வெகு தூரமில்லை’. இப்படத்தை ஷார்க் 9 பிக்சர்ஸ் சார்பில், சிவா கில்லரி தயாரித்துள்ளார். ’போகுமிடம் வெகு தூரமில்லை’ திரைப்படத்தில் விமல், கருணாஸ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் ஆடுகளம் நரேன், பவன், தீபா சங்கர், சார்லஸ் வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றாலும், வணிக ரீதியாக பெரிய வசூல் செய்யவில்லை. அமரர் ஊர்தி ஓட்டுநருக்கும், நலிந்த கூத்து கலைஞருக்கும் இடையேயான உரையாடல்களுடன் இப்படத்தின் திரைக்கதை படத்தை வேறு தளத்திற்கு கொண்டு சென்றன. விமல் மற்றும் கருணாஸ் இருவரின் நடிப்பும் அனைவரையும் கவர்ந்தது.

இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் அங்கேயும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. அதில் டாப் 4 திரைப்படங்கள் வரிசையில் இடம்பிடித்து சாதித்துள்ளது. மேலும் இப்படம், வெளியான சில நாட்களுக்குள், 70 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க: இவர்களுக்கெல்லாம் ரூ.100 சம்பளம் தானா? அதிர்ச்சி தரும் சினிமா பிரபலங்கள்!

இப்படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி மொழி பார்வையாளர்களையும் கவர்ந்திழுத்து, பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தை பார்த்த நடிகர் விஜய் சேதுபதி, படக்குழுவினரை நேரில் அழைத்து, அவர்களுடன் படம் குறித்து உரையாடி, விமலின் நடிப்பைப் பாராட்டி, படக்குழுவினருக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். ’போகுமிடம் வெகு தூரமில்லை’ படத்திற்கு கிடைத்து வரும் பாராட்டுக்களும் வரவேற்பும், படக்குழுவினரை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.