ETV Bharat / entertainment

"எனது நடிப்புத் திறனை வளர்த்துக் கொள்ள வெப்பன் படம் வாய்ப்பாக இருந்தது" - வசந்த் ரவி பேச்சு! - weapon movie - WEAPON MOVIE

Vasanth Ravi about Weapon movie: எமோஷன், ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் அதிக எண்டர்டெயின்மெண்ட்டோடு வெப்பன் திரைப்படம் உருவாகி இருக்கிறது என நடிகர் வசந்த் ரவி தெரிவித்துள்ளார்.

வசந்த் ரவி, தான்யா ஹோப் புகைப்படம
வசந்த் ரவி, தான்யா ஹோப் புகைப்படம (credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 5, 2024, 9:28 PM IST

சென்னை: இயக்குநர் குகன் சென்னியப்பன் இயக்கத்தில், நடிகர் வசந்த் ரவி நடித்திருக்கும் திரைப்படம் வெப்பன். இப்படம் ஜூன் 7ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதில் நடிகர் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

மேலும், வசந்த் ரவி, ராஜீவ் மேனன், தான்யா ஹோப், ராஜீவ் பிள்ளை, யாஷிகா ஆனந்த், மைம் கோபி, கனிஹா, கஜராஜ், சையது சுபன், பரத்வாஜ் ரங்கன், வேலுபிரபாகரன், மாயா கிருஷ்ணன், ஷியாஸ் கரேம், பெனிட்டோ பிராங்க்ளின், ரகு எசக்கி, வினோதினி வைத்தியநாதன், மேக்னா சுமேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க, பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கோபி கிருஷ்ணா எடிட்டிங் பணிகளையும், கலை இயக்கத்தை சுபேந்தரும், சண்டைக் காட்சிகளை சுதேஷ் கையாண்டுள்ளனர்.

இந்நிலையில், படம் குறித்து நடிகர் வசந்த் ரவி கூறும்போது, "வெப்பன் திரைப்படத்தின் விஷுவல் புரோமோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு எங்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. படத்தையும் பார்வையாளர்கள் பாராட்டுவார்கள் என்று முழுமையாக நம்புகிறோம்.

எமோஷன்ஸ், அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் ஆகியவற்றின் கலவையாக படம் தொடங்கியதிலிருந்து இறுதி வரை பார்வையாளர்களை நிச்சயம் மகிழ்விக்கும். ஒரு நடிகராக நான் எப்போதும் தனித்துவமான கதாபாத்திரங்களில் நடித்து, எனது நடிப்புத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புவேன். அந்த வாய்ப்பு வெப்பன் படத்தில் நடந்திருப்பது மிக்க மகிழ்ச்சி.

இந்த வாய்ப்புக்காக மில்லியன் ஸ்டுடியோவின் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர் குகன் சென்னியப்பனுக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். வெப்பன் பற்றி நிறைய விஷயங்களைப் பேச வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால், அது படம் பற்றிய ஸ்பாய்லராக மாறிவிடும்.

உலகளாவிய பார்வையாளர்களுக்கு இந்தப் படம் திரையரங்குகளில் நல்ல அனுபவத்தைக் கொடுக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன். இந்தியத் திரையுலகின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவரான நடிகர் சத்யராஜ் உடன் பணியாற்றி இருப்பது பெருமையாக இருக்கிறது” என்றார்.

இதையும் படிங்க: விஜய் சேதுபதியின் 'மகாராஜா' படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு - Vijay Sethupathi

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.