ETV Bharat / entertainment

"இந்தியாவில் எந்த டீக்கடையில் பேப்பர் வாங்கினாலும் விஜய்சேதுபதி படம்" - சூரி புகழாரம்! - actor soori starrer garudan - ACTOR SOORI STARRER GARUDAN

Garudan: இந்தியாவில் எந்த டீக்கடையில் பேப்பர் வாங்கி பார்த்தாலும் அதில் விஜய் சேதுபதி படம் இருக்கிறது என நடிகர் சூரி, கருடன் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் பேசினார்.

கருடன் ட்ரெய்லர் போஸ்டர்
கருடன் ட்ரெய்லர் போஸ்டர் (credits -actor soori X page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 21, 2024, 7:33 PM IST

சென்னை: இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், நடிகர்கள் சூரி, சசிக்குமார் ஆகியோர் நடிக்கும் படம் கருடன். இப்படத்தை லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சூரி, சசிக்குமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, மைம் கோபி, இயக்குநர் வெற்றிமாறன், பாடலாசிரியர் சினேகன், சூப்பர் சுப்பு, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, "விடுதலைக்கு ஆதரவு கொடுத்தீர்கள். இந்த படத்துக்கு ஆதரவு கொடுங்க. வடிவுக்கரசி பேச்சு ரொம்ப பிரமாதம். சூரி காமெடியனாக இருந்து கதாநாயகனாக யோசிப்பது ரொம்ப கஷ்டம்.

விடுதலைக்கு பிறகு கருடன் மாதிரி ஒரு படம் வருவது இயற்கையும், கடவுளும் ஆசிர்வதிப்பதாக நம்புகிறேன். நீ வாழ்க வளர்க. அடுத்த படத்துக்கு மதுரை மட்டும் இல்லாமல் அகில உலகம் என பேனர் போடுற அளவு வளரட்டும்" என்று வாழ்த்தினார்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் சூரி, "விடுதலைக்கு வந்ததுக்கு சேது மாமா வச்சு செய்றாரு. வெற்றிமாறன் கொடுத்த வாய்ப்பை தவற விட மாட்டோம் என்று நம்பிக்கையில் இருக்கிறேன். உண்மையில் இந்த மேடை எனக்கு அமையுமா என்று தெரியவில்லை.

இந்த கதை, இந்த கை தட்டல், சத்தம் எல்லாம் வெற்றிமாறனுக்குத் தான் சேரும். கதையின் நாயகனாக இந்த மேடையில் நிற்க காரணம் நீங்கள் தான். நீங்கள் விடுதலை படத்தில் கொடுத்த வாய்ப்பினால் தான் கருடன் வந்தது.

இந்தியாவில் எந்த டீக்கடையில் பேப்பர் வாங்கி பார்த்தாலும், அதில் விஜய் சேதுபதி படம் இருக்கிறது. கதையில் சசிக்குமார் அண்ணே இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. பழக்கத்துக்காக மதுரைக்காரன் கொலை கூட செய்வாங்க என்றும் ஜாலியாக ( படத்தின் டயலாக் பேசியவர்) சசிக்குமாரிடம் சொன்ன போது கதையை ஒப்பு கொண்டார்.

இன்றைக்கும் நான் நகைச்சுவை நடிகராக இருந்ததற்கு காரணம் சசிக்குமார் அண்ணா தான். எனக்கு சுந்தரபாண்டியன், போராளி படத்தில் இருந்தது போல் தான் இருந்தது. சினிமா நிகழ்ச்சியாக இருந்தாலும், குடும்ப நிகழ்ச்சியாக இருந்தாலும் சந்தோஷப்படுத்தும் தம்பி சிவகார்த்திகேயன். என் கூட பிறந்திருக்க கூடாதா என்று தோன்றும்.

வெற்றிமாறன் கிட்ட போய்ட்டா உங்களை வேற லெவலுக்கு கொண்டு போயிடுவார். எந்த இடத்துக்கும் போனாலும் உங்களுக்கான கதை வரும் என்று சிவகார்த்திகேயன் என்னை உத்வேகப்படுத்தினார். வடிவுக்கரசி அம்மா நீங்கள் வந்ததற்கு, உங்களுடன் சேர்ந்து நடித்ததற்கு பெருமையாக இருக்கிறது.

நீங்கள் நடிக்க வந்தது எங்களுக்கு மிகப்பெரிய ஆசிர்வாதம். என்னை மாதிரி ஆளுங்கள பார்க்க, பார்க்க தான் பிடிக்கும். விடுதலை படத்தின் காட்சிகளை இயக்குநர் செந்தில் பார்த்து விட்டு அந்த மீட்டரை தாண்ட மாட்டார் என்று கூறினார். சிவகார்த்திகேயனிடம் இருந்து டான்ஸ் & விஜய் சேதுபதியிடம் இருந்து பாடி லாங்குவேஜ் பிடிக்கும் அதை எடுத்து கொள்ள வேண்டும் என்று நினைப்பேன்.

அவர்களின் படங்களில் ரீமேக்கில் நடிப்பது குறித்த கேள்விக்கு, சிவகார்த்திகேயன் படத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் & சூது கவ்வும் (விஜய் சேதுபதி), சிவகார்த்திகேயனாக 1 நாள் இருந்தால் என்ன செய்வீங்க என்றதற்கு, 10 தயாரிப்பாளர் கிட்ட இருந்து அட்வான்ஸ் வாங்கிட்டு போயிடுவேன். விஜய் சேதுபதி உடம்பில் இருந்தால் பாம்பே பக்கம் போயி, 10 செக் வாங்கிட்டு வந்துடுவேன்" என்றார்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் சசிக்குமார், "இந்த படத்தில் கடைசி வந்தது நான் தான். இயக்குநர் கதை சொன்னதும், தயாரிப்பாளர் பழங்களோடு வந்து போட்டோ எல்லாம் எடுத்து ஓகே பண்ண சொல்லிட்டார்.‌ கதை கேட்க வருவதற்கு முன்பே, சூரிக்காக இந்த படம் பண்ண வேண்டும் என்று நினைத்து விட்டேன்.

வெற்றிமாறன் சூரியை பெரிய ஹீரோவாக வளர்த்து விட்டார். சூரிக்காக தான் எல்லோரும் வந்திருக்கிறார்கள். சுந்தர பாண்டியன் படத்துக்கு பிறகு நாங்கள் பண்ணும் படம்.‌ சூரியின் வளர்ச்சியில் இங்கிருக்கும் எல்லோருக்கும் அக்கறை உண்டு" என்றார்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், "கருடன் படத்தை பொறுத்தவரை இரண்டு முக்கியமான விஷயம். ஒன்று இயக்குநர் செந்தில். மற்றொன்று சூரி. செந்திலிடம் நிறை என்றால் அவர் அன்பு தான். ரொம்ப இனிமையான மனிதர்.

விடுதலை படத்துக்கு முன் 2, 3 முறை பேசி இருக்கிறோம். சசிக்குமார் கதையை ஒப்பு கொண்டது ஆச்சரியமாக இருந்தது. சூரிக்காக கதையை பண்ணுவதாக சொன்னதற்கே பாராட்டுகள். எல்லோரும் ரொம்ப நன்றாக நடித்துள்ளார்கள். சமுத்திரக்கனியை படத்தில் பார்க்கும் போது ஒரு நம்பகத்தன்மை வருகிறது" என்றார்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய இயக்குநர் துரை செந்தில்குமார், "நான் பாலச்சந்தரிடம் வேலை செய்யும் போது அவரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் வெற்றிமாறன். இந்த படத்தை பற்றி தயாரிப்பாளர் சொன்ன சூட்சுமம் ரொம்ப பிடித்திருந்தது.

மதுரை படம் என்று சொல்லும் போதே யாரெல்லாம் இருந்தால் நன்றாக இருக்குமோ அவர்கள் இருக்க வேண்டும் என்றும் நினைத்தேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில், அவங்க கதாபாத்திரம் என இந்த படம் நன்றாக அமைந்துள்ளது.

சமுத்திரக்கனிக்கும் போனில் தான் கதை சொன்னேன். அப்போதே ஒரு எனர்ஜி வந்து விட்டது. சசிக்குமாரின் ஆதி கதாபாத்திரம் தான் படத்தின் அடித்தளமே. அவர் ஸ்பாட்டில் இருந்த நாட்களில் அவர் தான் ஹீரோ. சூரியும் அப்படித்தான் இருந்தார்.

புலி, சிங்கத்துக்கு நடுவில் சூரி தான் வேட்டைக்காரன். விடுதலையில் சூரிக்கு ஒரு மீட்டர் செட் பண்ணிருக்கேன். அதை மீறி விடாத என்று வெற்றிமாறன் சொன்னார். அதனால் பார்த்து பார்த்து கவனமாக இந்த படத்தை செய்தேன். யுவன் சங்கர் ராஜாவால் இந்த நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை. இந்த படத்தை வேற லெவலுக்கு தூக்கியது யுவனின் இசை தான்" என்று பேசினார்.

இதையும் படிங்க: சென்னை ஐஐடி உடன் புதிய ஒப்பந்தம்; 200 இளையராஜாக்களை உருவாக்க இசைஞானி விருப்பம்! - ILAIYARAAJA MUSIC LEARNING CENTRE

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.