ETV Bharat / entertainment

அமரன் படத்தில் ராணுவ வீரராக தாடி வைத்தது ஏன்?... பிக்பாஸ் வீட்டில் விளக்கம் அளித்த சிவகார்த்திகேயன்!

Sivakarthikeyan enters bigg boss 8 house: பிக்பாஸ் வீட்டிற்குள் அமரன் திரைப்பட ப்ரமோஷனுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் சென்று போட்டியாளர்கள் மத்தியில் கலகலப்பாக உரையாடினார்.

அமரன் போஸ்டர், சிவகார்த்திகேயன்
அமரன் போஸ்டர், சிவகார்த்திகேயன் (Credits - Raaj Kamal Films International X Account)
author img

By ETV Bharat Entertainment Team

Published : 2 hours ago

சென்னை: பிக்பாஸ் சீசன் 8இல் நேற்று அமரன் திரைப்பட ப்ரமோஷனுக்காக சிவகார்த்திகேயன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார். விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 8 தொடங்கி மூன்று வாரங்களை கடந்துள்ளது. நேற்று நாமினேஷன் ஃப்ரி பாஸிற்கான கடைசி டாஸ்க் வைக்கப்பட்டது. அதில் பெண்கள் அணியினர் வெற்றி பெற்றனர். இதனையடுத்து பல்வேறு உரையாடல் மற்றும் வாக்குவாதத்தை அடுத்து பெண்கள் அணியினர் பவித்ராவிற்கு நாமினேஷன் ஃப்ரி பாஸ் வழங்க முடிவு செய்தனர்.

இதில் தர்ஷா மற்றும் சவுந்தர்யாவிற்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை. சவுந்தர்யா நான் அனைத்து டாஸ்கிலும் ஒத்துழைப்பு தருகிறேன், தனியாகவும் நன்றாக விளையாடுகிறேன் வேறென்ன வேண்டும் என வாக்குவாதம் செய்தார். ஆனால் இந்த வாரம் ஹோட்டல் டாஸ்கில் மேலாளராக கஸ்டமருக்கு பதிலளித்த விதம் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.

மேலும் பவித்ரா இந்த பாஸிற்கு தகுதியானவர் தான் என தோன்றுகிறது. அவர் தனி போட்டியாளராகவும், டாஸ்கிலும் நல்ல பங்களிப்பை வழங்கி வருகிறார். இதனைத்தொடர்ந்து போட்டியாளர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் என பிக்பாஸ் அறிவித்தார். வரும் தீபாவளி பண்டிகைக்கு அமரன் திரைப்படம் வெளியாகிறது.

இப்படத்தை விளம்பரப்படுத்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடிகர் சிவகார்த்திகேயன் வந்தார். அவருக்கு போட்டியாளர்கள் ஆண்கள், பெண்கள் அணியாக பிரிந்து போட்டி போட்டு மாலை போட்டு, ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். இதனைத்தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படம் குறித்து பேசினார். ”இது மேஜர் முகுந்த் வரதராஜன் பற்றிய எமோஷலான திரைப்படம். மேலும் இப்படத்தில் சாய் பல்லவி முகுந்த் வரதராஜனின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் நான் தாடி வைத்துள்ளது குறித்து கேள்வி எழுந்தது. மேஜர் முகுந்த் ராஷ்டிரியா ரைஃபில்ஸ் என்ற குழுவில் காஷ்மீரில் இருந்ததால், அந்த குழுவில் இருப்பவர்களுக்கு மக்களோடு மக்களாக இருக்க தாடி வைக்க இந்திய ராணுவம் அனுமதி வழங்கியது. அதனால் இப்படத்தில் நான் தாடி வைத்திருந்தேன் என்றார். பின்னர் விஷால் செய்த பாயாசத்தை சந்தேகத்துடன் சிவகார்த்திகேயன் சாப்பிட்டார்.

இதையும் படிங்க: 'வீரம்' டீசரை வெளியிட்டது முதல் அஜித்துடன் நடிப்பது வரை... நடிகர் அர்ஜூன் தாஸ் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு!

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பு குறித்து சிவகார்த்திகேயன் பேசுவார் என எதிர்பார்த்த நிலையில் எதுவும் பேசவில்லை. ஒவ்வொரு பிக்பாஸ் சீசனின் போது திரைப்பட ப்ரமோஷன்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் முன்னதாக டாடா படத்திற்காக கவின், பார்க்கிங் படத்திற்காக ஹரிஷ் கல்யாண் ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.