ETV Bharat / entertainment

'தக் லைஃப்' பட போஸ்டர் வெளியானது - மிரட்டல் லுக்கில் சிம்பு! - THUG LIFE MOVIE - THUG LIFE MOVIE

Thug Life: மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் 'தக் லைஃப்' படத்தில் நடிகர் சிம்புவின் தோற்றம் குறித்த போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது.

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 8, 2024, 2:13 PM IST

சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாக உள்ள புதிய திரைப்படம் "தக் லைஃப்" (Thug Life) கமல்ஹாசனின் 234வது படமான இத்திரைப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதில் ஜெயம் ரவி, த்ரிஷா, துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லட்சுமி, நாசர் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கால்ஷீட் பிரச்னை காரணமாக துல்கர் சல்மான் இப்படத்திலிருந்து விலகினார். துல்கர் சல்மானுக்குப் பதிலாக நடிகர் சிம்பு படத்தில் இணைந்துள்ளார். சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியானது. அதில் கமல் உடன் சிம்பு, அபிராமி, நாசர், வையாபுரி ஆகியோர் இருந்தனர்.

கமல் மற்றும் சிம்புவின் லுக் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இத்திரைப்படத்தில் சிம்புவின் தோற்றத்தைப் படக்குழு போஸ்டர் மூலம் இன்று வெளிப்படுத்தி உள்ளது. இதில் நடிகர் சிம்பு செம மாஸாக இருப்பதாக அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

முன்னதாக, மணிரத்னம் இயக்கத்தில் செக்கச்சிவந்த வானம் படத்தில் சிம்பு நடித்திருந்தார். நாயகன் படக் கூட்டணிக்குப் பின் 37 ஆண்டுகள் கழித்து கமல்ஹாசன் - மணிரத்னம் தற்போது மீண்டும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரசவாதி எப்படிப்பட்ட படம்? - இயக்குநர் சாந்தகுமார் பளீச் பதில்! - Rasavathi Movie

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.