ETV Bharat / entertainment

"உங்களுடன் செலவழித்த ஒவ்வொரு நொடியையும் போற்றுவேன்"... ரத்தன் டாடா மறைவிற்கு ரஜினிகாந்த் இரங்கல்! - RAJINI CONDOLENCES RATAN TATA DEATH

Rajinikanth condolences to Ratan tata death: பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ரத்தன் டாடா மறைவிற்கு ரஜினிகாந்த் இரங்கல்
ரத்தன் டாடா மறைவிற்கு ரஜினிகாந்த் இரங்கல் (Credits - ETV Bharat, @rajinikanth X account)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Oct 10, 2024, 3:24 PM IST

சென்னை: இந்தியா வர்த்தகத்தின் இமயமும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா (86), உடல்நலக் குறைவு காரணமாக மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையான ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டு, ஐசியூவில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று (அக்.9) இரவு 11.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி ரத்தன் டாடா உயிரிழந்தார். இந்நிலையில் ரத்தன் டாடா மறைவிற்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் ரத்தன் டாடா மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது பதிவில், “உலக வரைபடத்தில் இந்தியாவை தனது ஆர்வம் மற்றும் தொலைநோக்கு பார்வையால் இடம்பிடிக்க செய்த ஒரு மாபெரும் அடையாளம்.

இதையும் படிங்க: வேட்டையன் ரிலீஸ்: ரஜினி பூரண நலம்பெற வேண்டி மயிலாடுதுறை ரசிகர்கள் கூட்டுப் பிரார்த்தனை!

ஆயிரக்கணக்கான தொழிலதிபர்களுக்கு உத்வேகமாக இருந்த மனிதர். பல தலைமுறைகளாக லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கிய மனிதர். அனைவராலும் நேசிக்கப்படட்ட மனிதர். உங்களுடன் செலவழித்த ஒவ்வொரு நொடியையும் நான் போற்றுவேன். ரத்தன்ஜீ என்கிற உயர்ந்த உள்ளத்தில் ஆன்மா சாந்தி அடையட்டும்” என கூறியுள்ளார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.