ETV Bharat / entertainment

”துருவங்கள் பதினாறு திரைப்படத்தால் என் வாழ்க்கை மாறியது” - நடிகர் ரஹ்மான் நெகிழ்ச்சி!

Actor rahman about Nirangal moondru movie: 'துருவங்கள் பதினாறு' படத்திற்கு பிறகு தனது கரியர் முற்றிலும் மாறியதாகவும், 'நிறங்கள் மூன்று' படத்திலும் நம்பிக்கை உள்ளதாக நடிகர் ரஹ்மான் பேசியுள்ளார்.

நிறங்கள் மூன்று திரைப்பட குழு
நிறங்கள் மூன்று திரைப்பட குழு (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Entertainment Team

Published : 2 hours ago

சென்னை: ஐங்கரன் இண்டர்நேஷனல் கருணாமூர்த்தி தயாரிப்பில் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அதர்வா முரளி, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நிறங்கள் மூன்று'. வரும் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் அதர்வா, ரகுமான், அம்மு அபிராமி, இயக்குநர் கார்த்திக் நரேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் கார்த்திக் நரேன் பேசுகையில், “பல காரணங்களுக்காக 'நிறங்கள் மூன்று' திரைப்படம் எனக்கு ஸ்பெஷல். ஏனெனில், பல வருடங்கள் கழித்து தியேட்டரில் என் படம் வெளியாகிறது. படத்தின் நடிகர்கள், தொழில்நுட்ப குழு அனைவருக்கும் நன்றி. கதை கண்டிப்பாக பார்வையாளர்களுக்கு வித்தியாசமாக இருக்கும் என நம்புகிறேன்” என்றார்.

நடிகர் ரஹ்மான் பேசும் போது, ”இந்த வருடம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். என்னுடைய ஐந்து படங்கள் வெளியாகியுள்ளது. தமிழில் இரண்டு படங்கள் வெளியாகியுள்ளது. 'நிறங்கள் மூன்று' என்ற வித்தியாசமான கதையில் நான் இருக்கிறேன் என்பது மகிழ்ச்சி. 'துருவங்கள் பதினாறு' படத்திற்கு பிறகு எனது கரியர் முற்றிலும் மாறியது. இப்போது 'நிறங்கள் மூன்று' படத்திலும் அதே நம்பிக்கை உள்ளது. 'துருவங்கள் பதினாறு' படத்திற்கு முன்பே நரேன் வைத்திருந்த கதை இது. படம் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்” என்றார்.

நடிகர் அதர்வா பேசுகையில், ”கார்த்திக்கின் 'துருவங்கள் பதினாறு' படம் பார்த்ததில் இருந்தே அவருடன் பணிபுரிய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அவர் ஒரு காட்சியை அணுகும் விதமே வித்தியாசமாக இருக்கும். நிஜத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு நேர்மாறான ஒரு கதாபாத்திரத்தை தான் எனக்கு இதில் கொடுத்தார். பயம் கலந்த சந்தோஷத்துடன் அவர் மீதுள்ள நம்பிக்கையில் தான் சம்மதித்தேன்.

இதையும் படிங்க: நயன்தாரா அறிக்கையால் பற்றி எரியும் கோலிவுட்... தனுஷ் வீடியோவை பகிர்ந்த விக்னேஷ் சிவன்!

உண்மையிலேயே இது வித்தியாசமான படம். எந்த ஜானரிலும் இதை அடக்க முடியாது. சரத்குமார், ரஹ்மான் போன்ற சீனியர் நடிகர்களுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. துஷ்யந்த், அம்மு அபிராமி என எல்லாரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் புது அனுபவம். படத்தைத் தயாரித்த கருணா மற்றும் மனோஜ் சாருக்கு நன்றி. டெக்னிக்கல் டீம் சிறந்த பணியைக் செய்துள்ளது. இப்படத்தில் நிறைய புது விஷயங்கள் உள்ளது. 22ஆம் தேதி இந்தப் படத்தை திறந்த மனதுடன் வந்து திரையரங்குகளில் பாருங்கள்” என்றார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.