ETV Bharat / entertainment

20 வருடங்களுக்கு பிறகு இணையும் விருமாண்டி கூட்டணி.. தக் லைஃப் மாஸ் அப்டேட்! - Thug life movie

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 30, 2024, 3:49 PM IST

Thug life movie: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு உள்ளிட்ட பலர் நடித்து வரும் தக் லைஃப் படத்தில் நடிகர் நாசர் மற்றும் நடிகை அபிராமி ஆகியோர் இணைந்துள்ளனர்.

தக் லைஃப் பட போஸ்டர்
தக் லைஃப் பட போஸ்டர் (Credits - @RKFI)

சென்னை: நடிகர் கமல்ஹாசன் கல்கி திரைப்படத்தில் சிறிது நேரம் தோன்றினாலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். கல்கி இரண்டாம் பாகத்தில் கமல்ஹாசனுக்கு முக்கிய வேடம் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும், படத்தின் நீளம் 15 நிமிடம் குறைக்கப்பட்டு மீண்டும் திரையிடப்பட்டது.

இந்நிலையில், தற்போது மணிரத்னம் இயக்கத்தில் 'தக் லைஃப்' (thug life) படத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார். இயக்குநர் மணிரத்னம் 'தக் லைஃப்' கமல்ஹாசனின் 234வது படமாகும். நாயகன் என்ற கல்ட் கிளாசிக் திரைப்படத்தை தமிழ் சினிமாவிற்கு வழங்கிய இக்கூட்டணி சுமார் 37 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளது.

தக் லைஃப் படத்தில் சிம்பு, த்ரிஷா, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மேலும், இப்படத்தில் நடிகர் அசோக் செல்வன் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. தக் லைஃப் திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கின்றன. ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த ஜனவரி மாதம் சென்னையில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

தக் லைஃப் படப்பிடிப்பு தற்போது வரை 60 சதவீதம் முடிவடைந்துவிட்ட நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது. அப்போது அயர்லாந்து நாட்டிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் முக்கிய காட்சிகள் படமாக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இப்படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தக் லைஃப் படத்திற்காக நடிகர் சிம்பு தனது டப்பிங் பணியை தொடங்கிய புகைப்படம் சமீபத்தில் வெளியானது. அதேபோல், நேற்று கமல்ஹாசன் தனது டப்பிங் பணியை தொடங்கினார். இந்நிலையில், தற்போது நடிகர் நாசர் மற்றும் அபிராமி இப்படத்தில் இணைந்துள்ளதாக தக் லைஃப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விருமாண்டி படத்திற்கு பிறகு அபிராமி மீண்டும் கமல்ஹாசன் படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: செம்பருத்தி டீயால் வந்த பிரச்னை.. டாக்டரின் பதிவிற்கு நயன்தாரா சூசக பதில்! - NAYANTHARA Hibiscus Tea issue

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.