ETV Bharat / entertainment

"ஹரா படம் உங்களை ஏமாற்றாது" - நடிகர் மோகன் சிறப்புப் பேட்டி! - Actor Mohan exclusive press meet - ACTOR MOHAN EXCLUSIVE PRESS MEET

Actor Mohan exclusive press meet: தனது பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்ற மக்களுக்கு உதவிகள் செய்த நடிகர் மோகன், தான் நடித்துள்ள ஹரா படம் குறித்து ஈடிவி பாரத்திற்கு பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார்.

நடிகர் மோகன் புகைப்படம்
நடிகர் மோகன் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 10, 2024, 6:00 PM IST

நடிகர் மோகன் அளித்த பிரத்யேக பேட்டி (Video credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: தமிழ் திரையுலகில் 80களில் வெள்ளிவிழா நாயகனாக வலம் வந்தவர் நடிகர் மோகன். இவரது நடித்த படங்களில் இடம் பெற்றுள்ள பாடல்கள் இன்றளவிலும் ரசிகர்களால் கொண்டாடப்படக் கூடியவை. இன்னும் கூறுவதென்றால் இவர் 'மைக் மோகன்' என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

இந்த நிலையில், கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான 'சுட்ட பழம்' என்ற படத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து நீண்ட நாட்களாகத் திரையில் தென்படாத நடிகர் மோகன தற்போது, தாதா 87, பவுடர் உள்ளிட்ட படங்களை இயக்கிய விஜய் ஸ்ரீ இயக்கத்தில் 'ஹரா' என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் குஷ்பு, யோகி பாபு, வனிதா விஜயகுமார், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு மற்றும் சாருஹாசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனிடையே, நடிகர் மோகன் தனது பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் மதியம் உணவு வழங்கினார்.

அந்தவகையில், சென்னை டிடிகே சாலையில் உள்ள அன்னை அன்பாலயா அறக்கட்டளையில் பெண்கள் மற்றும் முதியோர் காப்பகத்தில் வசிக்கும் மக்களுக்கு மதிய உணவு வழங்கினார். அதனைத் தொடர்ந்து ஈடிவி பாரத்திற்கு பிரத்தியேக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "ஹரா படம் தயாராக உள்ளது. இந்த உங்களை ஒருபோதும் ஏமாற்றாது என்று நான் நம்புகிறேன். படத்தைப் பார்த்துவிட்டு கருத்துகளைச் சொல்லுங்கள், கண்டிப்பாக அடுத்த படத்தில் சரி செய்துகொள்கிறேன்.

ஆண்டுதோறும், பிறந்தநாளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவேன். இந்த ஆண்டும் அதேபோல் நலத்திட்ட உதவிகள் செய்துள்ளேன்" எனக் கூறினார். மேலும், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் (The Greatest Of All Time) படத்திலும் நடிகர் மோகன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இயக்குநர் வசந்த பாலனின் "தலைமைச் செயலகம்" புதிய சீரியஸின் டிரெய்லர் வெளியீடு..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.